நித்தியக்கடன் டிசம்பர் 30 2022

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

டிசம்பர் 30


📊🍁📊🍁📊🍁📊🍁📊🍁📊


🔘 இன்றைய நித்தியக்கடன்


🔘 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🔘 இன்றைய சாதகம்


🔘 வெள்ளிகிழமை 

காலை, மாலை இரண்டு 

வேளையும் சாந்தி தவம்.

 

🔘 இன்றைய நற்சிந்தனை


🔘 மனித வாழ்க்கையில் போலிகள் நிறைய இருக்கின்றன. இந்த போலிகளை எல்லாம் அகற்றிக் கொள்ள வேண்டுமானால், அனைவரும் செய்ய வேண்டிய காரியம் என்று ஒன்று இருக்கிறது. அது உங்களுடைய வாழ்க்கை சூழ்நிலைகள் அனைத்திற்கும் ஆதரங்கள் உண்டு. ஆக எல்லா ஆதரங்களையும் தேடி கண்டறிந்து கொள்ளுங்கள். ஆதரங்கள் இல்லாமல் ஒரு வாழ்க்கை சூழ்நிலையில் இருந்து மற்றொரு வாழ்க்கை சூழ்நிலைக்கு நகரமுயற்சி செய்யாதீர்கள். ஏனெனில் மனித வாழ்க்கையின் அச்சானியே ஆதாரங்கள் தான்.


🔘 இன்றைய தற்சோதனை


🔘 நமக்குள்ளாக இருக்கும் போலிகளை இனம் கண்டுகொண்டு, அவைகளை வேரோடு அகற்றி கொள்வதற்கு ஆழ்ந்த ஆராய்ச்சியும், ஆராய்ச்சியின் முடிவான ஆதாரங்களும் மிகவும் அவசியம். இதற்கு உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும், உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவை நான்கையும் பயன்படுத்தித்தான் உங்களுக்கு உரிய சரியான ஆதாரங்களை சேகரித்து கொள்ள முடியும். எதனை நாம் நினைக்கின்றோமோ அதனுடைய தன்மை தரம் யாவும் நமக்குள் இயல்பாகவே உயர்வு பெறும் என்பது இயற்கையின் இறைவனின் நீதி.


🔘 இன்றைய பண்புப்பயிற்சி


🔘 ஆங்காங்கு வாழ்க்கை பயணம் திசை திரும்பும் போது சில பல சோர்வுகள் ஏற்படத்தான் செய்யும். சோர்வுகளின் போது நாம் சோர்ந்து விடாமல் நம்மை மேலும் மேலும் மெருகேற்றிக் கொள்வதற்கு முறையானது ஒரு திட்டம் நம்மிடையே இருக்க வேண்டும். குறிக்கோள் இல்லாது வாழ்க்கையில் எந்த ஒரு இலக்கையும் நாம் சென்று சேர முடியாது. ஆக திட்டமிட்டு குறிக்கோளோடு வாழ்வில் உயர்வு பெறுவோம். வாழ்க வளமுடன்...

 

🔘 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🔘 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🔘 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு

Vethathiriyam for world peace

www.vethathiri.edu.in

https://facebook.com/skyyogatv


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments