நித்தியக்கடன் டிசம்பர் 19 2022

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

டிசம்பர் 19


🔶🎲🔶🎲🔶🎲🔶🎲🔶🎲🔶


🌐 இன்றைய நித்தியக்கடன்


🌐 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🌐 இன்றைய சாதகம்


🌐 திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.

 

🌐 இன்றைய நற்சிந்தனை


🌐 ஒவ்வொரு இறைத்துகள்களின் வடதுருவத்தில் இருக்கும் காந்த அலைக்கும், தென் துருவத்தில் இருக்கும் காந்த அலைக்கும் வேறுபாடு உண்டு. இந்த இரண்டின் தன்மையும் வேறு தரமும் வேறு. இங்கிருந்து துவங்கிய தன்மையும் தரமுமே பஞ்ச பூதங்களிலும், பஞ்சபூதங்களாலான அனைத்து உயிர் வகைகளிலும் நிலவுகின்றன. இந்த பூமியில் துருவப் பகுதிகள் வேறுபடுவதற்கும் இதுவே காரணம். இந்த காந்தநிலை உண்மைகளை காந்தமாகவே இருந்து இயங்கும் மனதின் வழியாக பயணம் செய்து, கருமையத்துக்குள் இருக்கும் இறைகாந்தநிலையோடு இணைய வேண்டும். இவ்வாறாக இணைவதற்கு உருவானதே இந்த மனிதத் தோற்றமும், வளர்ச்சியும்.


🌐 இன்றைய தற்சோதனை


🌐 Pattern Precision Regularity அமைப்பு, துல்லியம், இயக்க ஒழுங்கு இவ்வாறாக இயங்கும் இறைநிலையின் அறிவு மனிதனுக்குள் இன்னொரு படி உயர்ந்து உணர்தல், அனுபவித்தல், பிரித்துணர்தல் என்ற சிறப்பு நிலையாக இயங்குகிறது. இந்த பேரறிவின் தன்மைகளை கலப்படமில்லாமல் உள்ளதை உள்ளவாறு உணர்ந்து தெளிவுபெறவேண்டும். அப்போதுதான் விலங்கினத்தில் இருந்து வித்துத் தொடராக தொன்றுதொட்டு, நமக்குள் இருந்து கொண்டிருக்கக்கூடிய தான் தனது என்ற பொருள்பற்றும் அதிகாரபற்றும் நம்மிடமிருந்து படிப்படியாக கரைந்து போகும். இதனை நன்றாக தற்சோதனை செய்து கடைத்தேறுவோமாக‌.


🌐 இன்றைய பண்புப்பயிற்சி


🌐 Pattern Precision Regularity அந்தந்த நிலைபாடுகளுக்குள் ஆங்காங்கு கிடைத்த அனுபவத்தை வைத்துக்கொண்டு, அதனை இன்னும் கொஞ்சம் உயர்த்திக்கொள்ள உள்ளிருந்தே செயல்படக்கூடிய, இறைவனின் பேரறிவை பேராற்றலை நாம் எண்ணிப் பார்த்து இவ்வாறாக இருக்கும் இறை நிலையோடு இணைவதற்கு, நாமும் அதற்குத் தகுந்த பண்பிலும், தரத்திலும், தன்மையிலும் உயர வேண்டுமென்ற உள்ளத் தெளிவை ஏற்படுத்திக் கொண்டு ஒவ்வொரு கணமும் அதற்கென திட்டமிட்டு செயல் புரிந்து ஞானத்தில் உயர்வோம். வாழ்க வளமுடன்...

 

🌐 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌐 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🌐 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு

Vethathiriyam for world peace

www.vethathiri.edu.in

https://facebook.com/skyyogatv


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments