வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜனவரி 17
🌀☘️🌀☘️🌀☘️🌀☘️🌀☘️🌀
♦️ இன்றைய நித்தியக்கடன்
♦️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
♦️ இன்றைய சாதகம்
♦️ செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
♦️ இன்றைய நற்சிந்தனை
♦️ அந்தந்த மண்ணில் அந்தந்த புல்வகை தான் முளைக்க வேண்டும், என்பது ஒரு விஞ்ஞான இயற்கை சட்டம். இந்த விஞ்ஞான இயற்கை சட்டத்தின் அடிப்படையிலேயே நம் உடலும், உயிரும், மனமும் இயங்குகிறது. அந்தந்த பக்குவ மனதிற்கு அந்தந்த அனுபவம் தான் கிட்டும் என்று, ஒரு விஞ்ஞான இயற்கை சட்டமிருக்கிறது, அவ்வாறுதான் நடைபெறவும் செய்கிறது. இதனை தாண்டி பல விஷயங்களை நாம் அனுபவம் ஆக்கிக்கொள்ள வேண்டுமென்று முயற்சி செய்யும் போது, அதற்கு தகுந்த மாற்றங்கள் உடலிலும், உயிரிலும், மனதிலும் ஏற்பட வேண்டும்.
♦️ இன்றைய தற்சோதனை
♦️ அந்த ஏற்பாடுகளை நோக்கி நம்மை இறைநிலை இயல்பாகவே உள்ளிருந்து தூண்டுகிறது. புறத்திலிருந்து இந்த ஏற்பாடுகளுக்கு நாம் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். இறைநிலையினுடைய இந்த தூண்டுதல்களுக்கு நம்மை நாம் தயார் செய்து கொள்வதற்காகவே உடல்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இந்த நான்கு விதமான கட்டமைப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகள் எதுவும் ஏற்படுத்திக் கொள்ளாமல் நமக்கு மெய்ஞான அனுபவங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை.
♦️ இன்றைய பண்புப்பயிற்சி
♦️ விஞ்ஞான, மெய்ஞான, இறை சட்டத்தில் கருமையம் ஒன்றே பிரதான பொருளாகும். கருமையத்தில் உள்ள தன்மை தரம் இவைகளுக்கு ஏற்பவே நம் வாழ்வில் நமக்கு என்னென்ன தேவைகள் என்னென்ன அனுபவம் ஏற்பட வேண்டுமோ, அதற்கு இயல்பாகவே நாம் தயாராகி வரும் இந்த கருமையத்தை மனவளக்கலை யோகா மூலமாக புதுப்பித்துக் கொள்ள முடியும். புதிய ஏற்பாடுகளை நோக்கி நகற்வோம், நாளைய வாழ்வை நமதாக்கி வாழ்வோம். வாழ்க வளமுடன்...
♦️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
♦️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
♦️ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment