வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜனவரி 16
♻️⭕♻️⭕♻️⭕♻️⭕♻️⭕♻️
💠 இன்றைய நித்தியக்கடன்
💠 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💠 இன்றைய சாதகம்
💠 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
💠 இன்றைய நற்சிந்தனை
💠 மண்ணோடு தொடர்புடைய மூலாதாரம், நீரோடு தொடர்புடைய சுவாதிஷ்டானம், நெருப்போடு தொடர்புடைய மணிபூரகம், காற்றோடு தொடர்புடைய அனாகதம், விண்ணோடு தொடர்புடைய விசுக்தி, காந்தத்தோடு தொடர்புடைய ஆக்கினை, தெய்வநிலையோடு தொடர்புடைய துரியம் நம் உடலுக்குள் உள்ள ஏழு ஆதாரங்களும் பிரபஞ்சவெளியில் உள்ள ஏழு ஆதாரங்களோடு இணையும்போது மாற்றங்கள் நிகழ வேண்டும். புதிய ஏற்பாடுகள் நமக்குள் துவங்க வேண்டும்.
💠 இன்றைய தற்சோதனை
💠 நாம் அந்தந்த மையங்களில் மனம் செலுத்தி தவம் செய்யும்போது, அந்தந்த மையத்துக்கு உரிய ஆற்றல் நம் உடலுக்குள் ஊடுருவி, அது அதற்குரிய மையத்தில் நிரம்பும். இந்த விஞ்ஞான நிகழ்ச்சி நடைபெறும் போது கூடவே இன்னொரு மெய்ஞான நிகழ்வும் நடைபெறும். இந்த மையங்களுக்கு உள்ளே நிரம்பும் சக்தி, அந்தந்த மையத்தின் உடைய உற்பத்தி ரகசியங்கள், இயக்கம், நுட்பம், இணக்கத்தன்மை, படைப்புத்திறன், பெருந்தகைமை, நுண்மாண் நுழைபுலன், ஏற்புத் திறன் அனைத்தையும் நமக்குள் பெறுகி அனுபவமாகும்.
💠 இன்றைய பண்புப்பயிற்சி
💠 இந்த உள்ளுணர்வு கல்வியில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவர்களுக்கு, உள்ளும் புறமும் இந்த பிரபஞ்ச சக்தி ஒன்று கலக்கும் போதும், சிலருக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகும், சிலருக்கு காலதாமதமாகும், பலர் இதை அறியவே மாட்டார்கள். உதாரணத்திற்கு நீரில் அரிசியை போட்டால் நீருக்கு தனக்குள் இடம் கொடுத்து அரிசி நன்றாக ஊறும். கல்லை நீருக்குள் போட்டால் அது எவ்வளவு நாட்கள் ஆனாலும் நீருக்கு தனக்குள் இடம் தராது. இதுபோலத்தான் இறைவனுக்கு உங்களுக்குள் இடம் கொடுங்கள், இடம் எல்லாம் அவனே ஆவன். வாழ்க வளமுடன்...
💠 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
💠 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
💠 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment