நித்தியக்கடன் ஜனவரி 14 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜனவரி 14


💢🔶💢🔶💢🔶💢🔶💢🔶💢


🌻 இன்றைய நித்தியக்கடன்


🌻 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🌻 இன்றைய சாதகம்


🌻 சனிக்கிழமை 

காலை:- சாந்தி தவம் 

மாலை:- நித்தியானந்ததவம்.

 

🌻 இன்றைய நற்சிந்தனை


🌻 ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு வாசனை உண்டு, ஒவ்வொரு பழங்களுக்கும் ஒவ்வொரு வாசனை உண்டு, அது போல மனிதனின் ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒவ்வொரு வாசனை உண்டு. மனதை ஆழ் நிலைக்கு அப்பால் கொண்டு சென்று பழகி, அங்கு நின்று நிலைத்து வாழும் போது இந்த வாசனையை நுகரமுடியும். நம்மை சுற்றி மூலிகை வாசமாக இருக்கும். அந்த வாசனையை இதற்கு முன் எங்கும் அனுபவித்து இருக்க மாட்டோம். நம்மைச் சுற்றியுள்ள காந்த களம் மிகவும் அடர்த்தியாக இருக்கும்.


🌻 இன்றைய தற்சோதனை


🌻 புலன்கள் வழியாக வெளியே விரிந்து திரியும் மனதை உள்முகமாக திருப்பி, புலன்கள் வழியாகவே உள்நோக்கி பயணம் சென்று உயிரில் ஒடுங்கி உயிராக நின்று நிலைக்கும் போது, மூளை செல்கள் மிகச்சிறந்த கட்டமைப்பை பெறுகிறது. அதன் விளைவாக உயர்ந்த காந்தமும் உயிர் களமும் அமைகிறது. மூளை பகுதியில் எப்போதும் ஞானவாசம் வீசும் இதனுடைய ஆழம், அகலம், நீளம் அனைத்தையும் தற்சோதனை செய்து அங்கே வாழ முனைவோம்.


🌻 இன்றைய பண்புப்பயிற்சி


🌻 கலப்படமில்லாத நினைவுகள், கலப்படமில்லாத பேச்சு, கலப்படமில்லாத செயல், கலப்படமில்லாத வாழ்க்கை இவ்வாறாக திட்டமிட்டுக் கொண்டு நாளுக்கு நாள் நம்மை உயர்த்திக் கொண்டே செல்வோமேயானால் துவக்கத்தில் பலவிதமான இன்னல்களும் இடர்பாடுகளும் இருக்கும். ஆனால் முடிவு நிச்சயமாக சுபமாகவே அமையும், இதற்கு விடாமுயற்சி தேவை. வேதாத்திரி மகரிஷி ஒரு கவியில் "எவரொருவர் குருவை அடிக்கடி நினைந்து ஒழுகினாலும் தப்பாது குருவின் அருள், நினைப்போர் தன்மை உயிரிலும் அறிவிலும் மாற்றம் காணும் இச்செயல் இயல்பூக்க நீதியாகும்". வாழ்க வளமுடன்...

 

🌻 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌻 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🌻 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு

Vethathiriyam for world peace

www.vethathiri.edu.in

https://facebook.com/skyyogatv


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments