வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜனவரி 13
📊🌸📊🌸📊🌸📊🌸📊🌸📊
⚜️ இன்றைய நித்தியக்கடன்
⚜️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
⚜️ இன்றைய சாதகம்
⚜️ வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
⚜️ இன்றைய நற்சிந்தனை
⚜️ முற்கால யோக முறைக்கும் தற்கால யோக முறைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. குண்டலினி யோக அனுபவங்களை சித்தர்கள் நிறைய பேசி இருக்கிறார்கள். புத்தகங்கள் மூலமாக தற்காலத்தில் அதை பற்றிய நேரடி அனுபவம் எதுவுமே இல்லாமல், பல சிந்தனையாளர்கள் எழுத்தாளர்கள் பெயருக்காக இந்த வேதாந்தம், சித்தாந்தம், உபநிஷத்துக்களை எழுத்தளவில் புரிந்து கொண்டு அதனையே அடிப்படையாகவைத்து, நடைமுறை வார்த்தை மூலம் மிகைப்படுத்தியும் மாற்றி கூறியும் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. ஆக அவைகளையெல்லாம் தயவுசெய்து நன்கு தற்சோதனை செய்து பாருங்கள். முற்கால யோக முறையானது ஒரு முழுமை பெறாத நிலையில் ஆங்காங்கு பலவிதமாக இருந்திருக்கிறது. ஆக முழு அனுபவத்தோடு பக்கவிளைவு இல்லாமல் அவைகள் உருவாக்கப்பட்டது அல்ல. இக்கருத்தை எம்மக்களோடு பகிர்ந்து கொள்வது எம் தலையாகிய கடமையாய் உணருகின்றோம்.
⚜️ இன்றைய தற்சோதனை
⚜️ இந்த எளிய முறை குண்டலினி யோக பயிற்சியானது (வேதாத்திரியம்) முற்கால யோக முறைக்கு முற்றிலும் மாறுபட்டதாகும். "குடும்ப வாழ்வும் குண்டலினி யோகமும்" என்ற தலைப்பிலேயே விரிவாக்கம் செய்து உடல்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை என்று அத்துணை பயிற்சிகளையும் உருவாக்கி உயர்ந்த உலக அமைதி எனும் பெரும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு, இதை வான் காந்தத்தில் நிரவி இப்பூமியில் விதைக்கப் பட்டிருக்கிறது. இது இறைநிலையின் பூரணமான எண்ணத்தின் முழு விளைவு மகரிஷியின் மூலமாக இம்மண்ணுலகில் வேதாததிரியம் வதைக்கப் பட்டிருக்கிறது.
⚜️ இன்றைய பண்புப்பயிற்சி
⚜️ உலக சமுதாய சேவா சங்கத்தில் உறுப்பினராக உள்ள அனைவரும் மிகவும் பாக்கியசாலிகள். ஏனெனில் நமக்கு அமைந்த குருவைப் போல முழுமையான ஞானகுரு நம்முடைய ஆசான் வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு கூட கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் இந்நேரம் உலக அமைதி நிறுவப் பட்டிருக்கும். ஆசான் வேதாத்திரி மகரிஷி அவர்களை விட நாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். பாக்கியசாலி என்ற சிந்தனையை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் யாம் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறோம். "நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தை சிறக்கட்டும்". வாழ்க வளமுடன்...
⚜️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
⚜️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
⚜️ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment