வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜனவரி 07
🎲🔮🎲🔮🎲🔮🎲🔮🎲🔮🎲
♻️ இன்றைய நித்தியக்கடன்
♻️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
♻️ இன்றைய சாதகம்
♻️ சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
♻️ இன்றைய நற்சிந்தனை
♻️ எல்லா மனிதர்களுக்கும் உள்ளுணர்வாக இருந்து பிரபஞ்ச தன்மாற்ற சரித்திரத்தில் இறைநிலையே எல்லாமுமாகவும் மனிதனாகவும் இருக்கிறது, என்ற உண்மையை உணர்ந்து கொள்வதற்கு எடுத்த பெரும் முயற்சி இந்த மனிதப் பிறவி இந்த பூமியில் உருவானது. இறை நிலைக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தூண்டிக் கொண்டே இருக்கிறது. இந்த தூண்டுதல்களை மனிதர்கள் தங்களுடைய பழக்கத்தின் வழியே புரிந்துகொண்டு பொருள், புகழ், அதிகாரம், புலனின்பம் இவைகளில் மயங்கி வாழ்வின் நோக்கத்தை மறந்து வாழ்ந்து இருந்து கொண்டிருக்கிறார்கள்.
♻️ இன்றைய தற்சோதனை
♻️ வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் என்ற வளம் நான்கையும் தன்னகத்தே வைத்துள்ள இறைநிலை சுத்தவெளி மனிதர்களுக்குள் செயல்படும்போது, அவரவர்களுடைய கர்மவினை பதிவுகளுக்கு ஏற்ப ஏற்றத்தாழ்வுடன் இயங்குகிறது. கூடியமட்டும் இறைநிலையை தன்னைத்தானே உணர்வதற்கான வாய்ப்பினை அவ்வப்போது உருவாக்கி அவ் வழியாக மனிதர்களை உந்தி தள்ளுகிறது. இந்த உந்துதல்களுக்கேட்ப மனிதர்கள் இணக்கமாக செயல்படும்போது அதுவே ஆன்மீக தேடலாக உருவாகிறது.
♻️ இன்றைய பண்புப்பயிற்சி
♻️ மனம் அமைதியான நிலையில் எப்போது இயங்குகிறதோ, அப்போதுதான் இறைநிலையின் உந்துதல்களை சரியாக புரிந்துகொண்டு அதற்கு உகந்த செயல் பண்புகளில் தன்னை உயர்த்திக்கொள்ள முடியும். அவ்வாறான பயிற்சி முறையில் தன்னை எப்போதும் ஆழமாக ஈடுபடுத்திக் கொண்டே இருக்கும் போது, இறைநிலையை உணர்வதற்கான இந்த மனிதப் பிறவியின் நோக்கம் நிறைவேற்றிக் கொள்ளப்படுகிறது. உள்ளதை உள்ளவாறு உணர்ந்து, நல்லதை செய்து, அல்லது தவிர்த்து, நலமுற நாமும் வாழ்ந்து, பிறரும் வாழ வழிவகை செய்வோம். வாழ்க வளமுடன்...
♻️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
♻️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
♻️ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment