வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜனவரி 05
🌸🔘🌸🔘🌸🔘🌸🔘🌸🔘🌸
🌿 இன்றைய நித்தியக்கடன்
🌿 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌿 இன்றைய சாதகம்
🌿 வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🌿 இன்றைய நற்சிந்தனை
🌿 வெங்காய சருகு போல தான் நம்முடைய கருமைய அமைப்பு இருக்கிறது, படலம் படலமாக உள்ளது. இவ்வாறு இருக்கும் நம் கருமைய அமைப்பில் ஒரு படலத்தில் இருந்து இன்னொரு படலத்திற்கு நாம் பயணம் ஆகின்றோம். இந்த பயணம் தன்னை தானே ஆய்வுக்கு உட்படுத்தி கொண்டு, மெய்ஞ்ஞான உண்மைகளை உணர்ந்து கொள்ளக்கூடிய பெரும் வாய்ப்பை உருவாக்குகிறது. வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளிய எளிய முறை குண்டலினி யோகம் தற்சோதனை, உடல் பயிற்சி, காயகல்பம், தவம் இவற்றில் முறையாக ஆழமாக தன்னை இணைத்துக் கொள்ளும்போது ஏற்படக்கூடிய ஒரு இயற்கை நிகழ்வாகும். இதனுடைய வளர்ச்சியும் முதிர்ச்சியும் ஞானம் என்று பேசப்படுகிறது.
🌿 இன்றைய தற்சோதனை
🌿 படலம் படலமாக இருக்கின்ற கருமைய அமைப்பை நாம் மெதுவாக, ஒரு படலத்தில் இருந்து ஒரு படலத்திற்கு பயணமாவோம். முற்காலத்தில் வேகமாக இதில் பயணிக்கும் முறை பெரும்பாலும் நடைமுறையில் இருந்தது. தற்கால எளியமுறை குண்டலினி யோகப் பயிற்சியில் நிதானமாகவும் அமைதியாகவும் ஒரு படலத்தில் இருந்து இன்னொரு படலத்திற்கு நாம் பயணமாகின்றோம். அவர் அவர்களுடைய கர்மவினைக்கும், முயற்சிக்கும், தன் ஆர்வத்திற்கும் ஏற்ப இந்த நிகழ்வானது நடைபெறுகிறது. தன்னை தானே ஆய்வுக்கு உட்படுத்திக் கொண்டு தன்னுடைய தரவுகளை இனம் கண்டு கொள்ளும் போது, மேலும் பல மெய்ஞ்ஞான உண்மைகள் அனுபவமாக கிடைக்கிறது.
🌿 இன்றைய பண்புப்பயிற்சி
🌿 இந்த அகநோக்கு பயணத்தில் சில நேரங்களில் வெறுமையாக ஏதுமற்றதாக தோன்றலாம். இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் முதலில் ஒரு படலத்தில் இருந்து இன்னொரு படலத்திற்கு பயணம் நாம் ஆகிவிடுகிறோம். அதற்கு பின் நம்முடைய பதிவுகள் வந்து சேருகிறது. கணப்பொழுதில் நாம் வெறுமையாக சில சமயம் இருப்பதற்கு இதுவே காரணமாகும். இந்த ஆன்மீக உள்ளுணர்வு பயணம் ஒவ்வொரு கருமையத்திற்கும் சாத்தியம். தேவை, எதார்த்தமான தன்னார்வம், விடாமுயற்சி, நற்பண்புகள் இவைகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும்போது பயணம் இனிதே துவங்கி இனிதே நிறைவேறுகிறது. வாழ்க வளமுடன்...
🌿 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌿 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🌿 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment