வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜனவரி 03
🕸️♨️🕸️♨️🕸️♨️🕸️♨️🕸️♨️🕸️
🦆 இன்றைய நித்தியக்கடன்
🦆 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🦆 இன்றைய சாதகம்
🦆 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
🦆 இன்றைய நற்சிந்தனை
🦆 எந்த ஒரு பறவையானாலும் அது தரையிலிருந்து ஒரு அளவு உயரத்திற்கு பறக்கும் வரை அதிகப் படியான சிரமம் எடுத்து பறக்க வேண்டியிருக்கும். அதே பறவையானது வானில் பறக்கத் துவங்கி விட்டால் சிரமம் ஏதும் இல்லாமல் சுலபமாக பறக்கலாம். இந்த விஞ்ஞானம் மனிதர்களுக்கும் பொருந்தும். தன்னுடைய தொழில், கல்வி, வாழ்க்கை இவைகளில் உயர்வதற்கான எல்லாவகையான முயற்சிக்கும் துவக்க காலத்தில் நிறைய உழைக்க வேண்டியிருக்கும். சிறிது நாட்களுக்குப் பிறகு சுலபமாக காரியங்களை செய்து கொண்டால் போதும், பெரிதாக எந்த ஒரு சிரமமும் ஏற்படுத்திக்கொள்ள தேவை இருக்காது.
🦆 இன்றைய தற்சோதனை
🦆 தவம், தற்சோதனை, உடற் பயிற்சி, காயகல்பம் இவைகளில் ஈடுபடும்போது ஆரம்ப காலத்தில் நமக்கு மிகுந்த சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். விடுபட்டுப் போகலாம் அல்லது தொடர்ந்து செய்ய முடியாத அளவுக்கு சூழ்நிலைகள் உருவாகலாம். இவைகளை எல்லாம் தாண்டி நாம் அதனோடும் அது நம்மோடும் இணைவதற்கான எல்லாவகையான வாய்ப்பு களையும், நாம் உருவாக்கிக் கொண்டு கவனமாக இருந்து திட்டமிட்டு அவைகளை நிறைவேற்றி கொண்டே இருக்க வேண்டும். இணையும் வரைதான் இடர்பாடுகளும் இன்னல்களுமிருக்கும் அதற்குப்பின் சுலபமாகிவிடும்.
🦆 இன்றைய பண்புப்பயிற்சி
🦆 ஒவ்வொரு செயலிலும் நாம் நம்மையே கண்காணிக்க வேண்டும். நம்மை நாம் கண்காணிக்க துவங்கும் ஒவ்வொரு நொடியும் நமக்கு வெற்றிக்கான அடித்தளமாக அதுவே அமைகிறது. நம்மை ஒருவர் கண்காணிக்கிறார் என்று வைத்துக் கொண்டால் நம்முடைய காரியங்கள், சிந்தனைகள், செயல்பாடுகள் எப்படி இருக்கும். நம்மை யாருமே கண்காணிப்பது இல்லை என்று ஆகிவிட்டால், அப்போது நாம் எப்படி நடந்து கொள்வோம். இதைவிட வேறு சிறந்த உதாரணம் தேவையில்லை. கவனமாய் இருந்து கவனித்து அறிவில், சிந்தனையில், செயலில் உயர்வோம். வாழ்க வளமுடன்...
🦆 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🦆 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🦆 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment