நித்தியக்கடன் டிசம்பர் 06 2022

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

டிசம்பர் 06


🍁🌸🍁🌸🍁🌸🍁🌸🍁🌸🍁


♻️ இன்றைய நித்தியக்கடன்


♻️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


♻️ இன்றைய சாதகம்


♻️ செவ்வாய்கிழமை 

காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.

 

♻️ இன்றைய நற்சிந்தனை


♻️ "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்று முன்னோர்கள் இந்த வாசகத்தை பெரும் ஆய்வுக்கு பின், உலக மக்கள் வாழ்வியலாகவே வழங்கியிருக்கிறார்கள். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், "அளவு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்று முன்னோர்கள் சொல்லவில்லை...... "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படியானால் உயிருக்கு உகந்த அளவு என்று ஒன்று நமக்குளாக இருக்கிறது. அந்த அளவை நாம் மீறும்போது எதுவானாலும் அது நஞ்சாக மாறுகிறது.


♻️ இன்றைய தற்சோதனை


♻️ உதாரணத்திற்கு "அளவோடு உணவை உண்டால் உடல் உணவை ஜீரணிக்கும், அளவுக்குமீறி உணவை உண்டால் உணவு உடலை ஜீரணிக்கும்" என்ற வேதாத்திரி மகரிஷியின் வார்த்தைகளை ஒப்பிட்டுப் பாருங்கள். உடலுக்கும் மனதுக்கும் இடையே உள்ள இனிமையை காத்தல், மனதுக்கும் உயிருக்கும் இடையே உள்ள இனிமையை காத்தல், தனக்கும் சமுதாயத்திற்கும் இடையே உள்ள இனிமையை காத்தல், தனக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள இனிமையை காத்தல். இந்த நான்கு வகையிலும் இனிமையை காத்துக் கொள்வதே உயிருக்கு உகந்த செயலாகும்.


♻️ இன்றைய பண்புப்பயிற்சி


♻️ ஐந்தில் அளவு முறை, இதை மீறவும் கூடாது முறை மாறவும் கூடாது. இதனை நன்றாக ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு இந்த கோட்பாட்டுக்குள் உங்களை வரையறுத்துக் கொள்ளுங்கள். நமக்கு உள்ளும் புறமும் ஏராளமான குறைகள் நிறைகள் இருக்கின்றன. இவற்றில் குறைகளை ஒதுக்கி ஓரமாக வைத்துவிட்டு நிறைகளோடு நிறைந்து, நிறைந்த மனதோடு வாழ்க்கை பயணத்தை இனிதே துவக்க வேண்டும். இவ்வாறாக நாம் நம்முடைய வாழ்க்கையின் இனிமையான பக்கங்களை உருவாக்கி கொண்டு, அதற்குரிய பண்புகளில் வாழ துவங்குவோமேயானால், வாழ்க்கை இனிமையாக அமையும். வாழ்க வளமுடன்...

 

♻️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


♻️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


♻️ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு

Vethathiriyam for world peace

www.vethathiri.edu.in

https://facebook.com/skyyogatv


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments