வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
டிசம்பர் 05
🔳🔥🔳🔥🔳🔥🔳🔥🔳🔥🔳
🕰️ இன்றைய நித்தியக்கடன்
🕰️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🕰️ இன்றைய சாதகம்
🕰️ திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🕰️ இன்றைய நற்சிந்தனை
🕰️ இறைநிலையின் தன்மாற்ற சரித்திரத்தைப் பற்றி நமக்கு ஒரு கேள்வி இந்த நொடியில் எழுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்...... அதற்கான பதில் சில நொடிகள் கழித்து வரலாம், சில நேரங்கள் கழித்து வரலாம், சில நாட்கள் கழித்து வரலாம், சில மாதங்கள் கழித்து வரலாம், சில வருடங்கள் கழித்து வரலாம். நமக்கும் உண்மைக்கும் இடையே எவ்வளவு தூரம் இருக்கிறதோ, அதனை பொறுத்து இந்த விடையானது கிடைக்கும். இதில் என்ன ஒரு வியப்பு என்றால்.... உண்மை எங்கேயோ வெளியில் இல்லை, அது நமக்குளாகவே நம்முடனேயே இரண்டெனக் கலந்திருக்கிறது. ஆனால் அதற்கும் நமக்குமான இணக்கத்தன்மை நட்பு நல்ல முறையில் இல்லை.
🕰️ இன்றைய தற்சோதனை
🕰️ இந்த இடைவெளியை எப்படி குறைப்பது எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் இவைகளில் நாம் எவ்வளவு தேர்ச்சி பெற்று இருக்கிறோமோ அந்த அளவிற்கு அதற்கும் நமக்குமான இடைவெளி குறையும். ஆக இடைவெளியை குறைத்து கொள்ளவேண்டிய வாய்ப்பு நம்மிடமே முழுமையாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பினை நாம் தான் சரியாக பயன்படுத்தி தேர்ச்சி பெறவேண்டும். தேர்ச்சி பெறுவதற்கான எல்லா வழிமுறைகளையும் மனவளக்கலை பயிற்சியில் உள்ளடக்கமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
🕰️ இன்றைய பண்புப்பயிற்சி
🕰️ விலங்கினப் பதிவுகள் ஒருபுறம் தெய்வீக நிலைபாடு ஒருபுறம், இதற்கு நடுவில் தான் நாம் இருந்து போராடிக் கொண்டிருக்கிறோம். பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பங்களில் நம்மை விலங்கினப் பதிவுகள் ஆழ்த்தும். பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் இவைகளை தூண்டிவிட்டு நாம் இறைநிலையோடு இணையும் முயற்சிகளை சிதைப்பதற்கு பலமாக முயற்சி செய்யும். எது எப்படி இருந்தாலும் நாம் நம்முடைய நம்பிக்கையை தளர விடாமல், இறைநிலை கூறிய பண்புகளையும் தன்மைகளையும் உயர்த்திக்கொண்டு பயிற்சிகளின் வாயிலாக உயர்வு பெற வேண்டும். வாழ்க வளமுடன்...
🕰️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🕰️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🕰️ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment