நித்தியக்கடன் டிசம்பர் 04 2022

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

டிசம்பர் 04


🕳️🔮🕳️🔮🕳️🔮🕳️🔮🕳️🔮🕳️


🌍 இன்றைய நித்தியக்கடன்


🌍 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🌍 இன்றைய சாதகம்


🌍 ஞாயிற்றுகிழமை 

காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 

மாலை:- இறைநிலை தவம்.

 

🌍 இன்றைய நற்சிந்தனை


🌍 இந்த பூமியில் கிடைத்திருக்கும் நிறைவான வாழ்க்கையை பிழை திருத்தங்களோடும், சீர்திருத்தங்களோடும் வாழ முயற்சி செய்ய வேண்டும். பிழைதிருத்தையும், சீர்திருத்தத்தையும் நமக்குள் நாம் உருவாக்கிக் கொள்ளவில்லை என்றால், எதிர்கால வாழ்க்கையும் நம்முடைய அடுத்த சந்ததியினர் வாழ்க்கையும், கேள்விக்குறியாக மாறிவிடும் திசை தெரியாத காட்டு வழியில் பயணம் செய்வது போல அது அமைந்து விடும்.


🌍 இன்றைய தற்சோதனை


🌍 பிழை திருத்தங்களுக்கும் சீர்திருத்தங்களுக்கும் பயிற்சி என்பது மிகவும் அவசியம். நான் ஒன்றை ஏன் செய்கிறேன்? எதற்காக செய்கிறேன்? இதனுடைய பின்விளைவு என்ன? என்பதை தெளிவாக எண்ணி கணக்கு எடுத்துக்கொண்டு அதற்கு பின் செயலை செய்ய முனைய வேண்டும். எழுகின்ற உணர்ச்சிகளை எல்லாம் நாம் செயல்களாக செய்து விடக்கூடாது. அது வாழ்க்கையில் பலவகையான துன்பங்களை கொண்டு வந்து சேர்த்து விடும். இதனை தற்சோதனை செய்து தவிர்ப்பதுதான் சிந்தனையாளர்களினுடைய பொறுப்பும் கடமையுமாகும்.


🌍 இன்றைய பண்புப்பயிற்சி


🌍 முனைப்போடு இருந்து முயற்சி செய்து நாம் இதில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். ஏனெனில் நம் வாழ்க்கையை சிந்தனை, சிக்கனம், சீர்திருத்தம் இல்லாமல் எந்த ஒரு இலக்கையும் நம்மால் சென்று சேர முடியாது. சரியானதொரு இலக்கை நோக்கி நம் பயணம் அமைய வேண்டுமானால் சிந்தனை, சிக்கனம், சீர்திருத்தம் இவைகளை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். இந்த பண்புகளை அடிப்படையாகக் கொண்டு நாளுக்கு நாள் நம் வாழ்கையில் நலமும் வளமும் பெருக வாழ்வோம். வாழ்க வளமுடன்...

 

🌍 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌍 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🌍 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு

Vethathiriyam for world peace

www.vethathiri.edu.in

https://facebook.com/skyyogatv


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments