நித்தியக்கடன் டிசம்பர் 03 2022

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

டிசம்பர் 03


♦️🌀♦️🌀♦️🌀♦️🌀♦️🌀♦️


🌳 இன்றைய நித்தியக்கடன்


🌳 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🌳 இன்றைய சாதகம்


🌳 சனிக்கிழமை 

காலை:- சாந்தி தவம் 

மாலை:- நித்தியானந்ததவம்.

 

🌳 இன்றைய நற்சிந்தனை


🌳 ஒரு ஆலமரம் சுவற்றுக்குள் இருந்து முளைத்தால் நாளாக நாளாக அந்த சுவர் விரிசல் விட துவங்கி விடும். ஒரு சிறிய ஆலம் விதை ஐந்து வருடம் பத்து வருடம் கழித்து ஒரு பலம் வாய்ந்த சுவரையே இரண்டாக பிரிக்கிறது என்றால், கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்... நீண்ட நெடிய முயற்சி சிறுதுளி பெருவெள்ளம் என்கின்ற அளவிற்கான முயற்சி, பாறை போல இறுகிப்போன உங்கள் மனதில் உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை எனும் ஞான விதைகளை விதையுங்கள். இது வளர்ந்து இருகிப் போன உங்கள் மனதை உடைக்கட்டும், துகள் துகளாக மாற்றட்டும், லேசான நிலைபாடு அமையட்டும், இறை உணர்வு மேலோங்கட்டும்.இதற்கு நீண்ட நெடிய முயற்சி தேவைப்படும், ஒரு நாள் இரண்டு நாளில் இது நிறைவேறி விடாது.


🌳 இன்றைய தற்சோதனை


🌳 ஆலமரம் போலவும், சிறுதுளி பெருவெள்ளம் என்ற நிலைபாட்டை போலவும், நாம் விடாது முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். பலன்களை திட்டமிட்டுக் கொள்ளலாம், ஆனால் அவைகளை எதிர்பார்க்கக்கூடாது. எதிர்பார்ப்பு நிச்சயமாக நிறைவேறும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. நடக்கலாம் நடக்காமலும் போகலாம், அது அவரவர் வினை பதிவை பொருத்தது. இந்த தத்துவத்தை நன்றாக தற்சோதனை செய்து உளமாற ஏற்று வாழ்வோம்.


🌳 இன்றைய பண்புப்பயிற்சி


🌳 திட்டமிடுவதற்கும் எதிர் பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. ஒரு வருடம் கழித்து என்ன படிப்பை முடித்திருக்க வேண்டும், தொழிலில் முன்னேற்றம் கண்டு இருக்க வேண்டும், வீடு கட்டி முடித்து இருக்க வேண்டும், என்ற எண்ணத்திற்கு நம்முடைய வசதி வாய்ப்புகள், சூழ்நிலைகள், பொருளாதாரம் அனைத்தும் சரியாக பொருந்துமா? என்பதை பார்த்துக் கொண்டு திட்டமிட்டு அவைகளை உருவாக்கிக் கொள்ளலாம். எதிர்பார்ப்பு என்பது சூழ்நிலைகள், வசதி வாய்ப்புகள், பொருளாதாரம் இவைகள் எதையுமே சிந்திக்காமல் திட்டமிடாமல் வெறும் நினைவுகளால் மட்டுமே நினைத்துக் கொண்டே இருப்பது எதிர்பார்த்தலாகும். இது வேலைக்கு ஆகாது. திட்டமிட்டு செயல்புரியும் பண்பில் உயர்வோம், உள்ளதை உள்ளவாறு உணர்ந்து ஏற்று வாழ்வோம். வாழ்க வளமுடன்...

 

🌳 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌳 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🌳 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு

Vethathiriyam for world peace

www.vethathiri.edu.in

https://facebook.com/skyyogatv


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments