நித்தியக்கடன் ஆகஸ்ட் 08 2022

☘️🔶☘️🔶☘️🔶☘️🔶☘️🔶☘️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஆகஸ்ட் 08*

☘️🔶☘️🔶☘️🔶☘️🔶☘️🔶☘️

🎱 *இன்றைய நித்தியக்கடன்*

🎱 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🎱 *இன்றைய சாதகம்*

🎱 திங்கட்கிழமை 
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.
 
🎱 *இன்றைய நற்சிந்தனை*

🎱 இந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் தனித்துவம் வாய்ந்தது, நம் உடல் முழுவதும் ஓடிக் கொண்டிருக்க கூடிய உயிர். பஞ்சபூத தத்துவத்தில் முதல் தத்துவமாகிய, விண்ணைத் தான் நம் உடலில் உயிர் என்று பேசுகின்றோம். பஞ்சபூதங்களில் ஒன்று மற்றொன்றோடு இணைந்தால் எது வலிமைமிக்கதோ அது எதிர் நிலையில் உள்ளதை அழித்துவிடும். இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது இந்த உயிர்.

🎱 *இன்றைய தற்சோதனை*

🎱 உயிரானது காற்றை கடக்கும்,   நெருப்பின் வெப்பத்தை தாங்கிக் கொள்ளும், குளிர்ச்சியில் உறையாமல் ஊடுருவி செல்லும், கெட்டிபொருள் எதற்குள்ளும் சிக்கி நின்று விடாமல், அவைகளுக்கு மத்தியில் ஊடுருவி கடந்து செல்லும். இவ்வாறாக உயிரானது எல்லாவிதமான நிலைப்பாடுகளையும் தாங்கிக்கொண்டு தன்னை தனித்துவத்தோடு, தகவமைத்துக் கொள்ளக் கூடிய சிறப்புமிக்கது உயிர். இந்த உயிர் மீது மனம் வைத்து தவம் செய்யும்போது மனமும் உயிரின் சிறப்பு நிலைகளை எல்லாம் பெரும் என்பதே உண்மையாகும். இதனை நன்றாக தற்சோதனை செய்து தவத்தின் மேன்மையை  பெறுவோம்.

🎱 *இன்றைய பண்புப்பயிற்சி*

🎱 இறைநிலையை உணர்வதற்கான வாய்ப்பு களோடும் வசதிகளோடும் உருவானதே இந்த மனித உடலமைப்பும், கருமையமும் ஆகும். இந்த சிறப்புகளை எல்லாம் பயன்படுத்தினால் தவிர அவைகள் பயன்பாட்டிற்கு வராது. அறிவோடு நின்று உங்களை நீங்களே ஊக்கப்படுத்துங்கள். தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, உயிருக்கோ, எண்ணம், சொல், செயல் வழியாக துன்ப விளைவை ஏற்படுத்தாமல் நீங்கள் வாழப்பழகும் நாள் முதற்கொண்டு பிரம்மஞானம் உங்களுடையதாகும். வாழ்க வளமுடன்...

🎱 *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். கிரகண நாளாக இருந்தால் கிரகண நேரத்தில் பஞ்சபூத நவகிரக தவம் செய்வது சிறப்பு. இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🎱 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🎱 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments