நித்தியக்கடன் ஆகஸ்ட் 02 2022

♦️⛳♦️⛳♦️⛳♦️⛳♦️⛳♦️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஆகஸ்ட் 02*

♦️⛳♦️⛳♦️⛳♦️⛳♦️⛳♦️

🎲 *இன்றைய நித்தியக்கடன்*

🎲 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🎲 *இன்றைய சாதகம்*

🎲 செவ்வாய்கிழமை 
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
 
🎲 *இன்றைய நற்சிந்தனை*

🎲 இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு அணு கூட்டு அமைப்பிற்கும் ஒவ்வொரு கோட்பாடுகள் இருக்கின்றன. இந்த கோட்பாடுகள் அனைத்தும் காலத்திற்கு ஏற்ப, சீர்திருத்தங்களை உருவாக்கிக் கொண்டு, அதற்குள்ளாகவே தன்னையும் முழுமையாக வைத்துக்கொண்டு, இறைநிலை அனைத்துமாக தன் மாற்றம் பெற்று இருக்கிறது. எல்லாமும் இறைவனாக இருந்தபோதும், எல்லாவற்றுள்ளும் இறைவன் இருக்கின்றான் என்ற போதும், அந்தந்த கோட்பாடுகளுக்குள்  அது அதுவாகவே இருந்து, அது அதனையே பாதுகாத்து, அது அதனையே மதித்து, இந்த பிரபஞ்ச விதி, இறைநீதி நடந்து கொண்டிருக்கிறது.

🎲 *இன்றைய தற்சோதனை*

🎲 அகண்டு விரிந்து இருக்கக்கூடிய இந்த பேரியக்க மண்டலத்தில் இருக்கும் தத்துவம் கோட்பாடு சுருக்கப்பட்டு, இந்த சரீரத்துக்குள்ளும் நடத்தப்படுகிறது. மகாஆகாசமாக இருக்கக்கூடிய பொருள்தான் இந்த பரு உடலுக்குள் சிதாகாசமாக இயங்குகிறது. சிந்தனை திறனும் தன்னைத்தானே உணரும் ஆற்றல் மிக்க சான்றோர் பெருமக்களாகிய, உங்கள் அனைவரையும் பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன், இறைநிலையை உணர்ந்து மதித்து அதற்கு ஏற்ற முறையில் வாழும் பண்பில் அனைவரும் உயர வேண்டும். இந்த உயர்வு ஒன்றுதான் உலகத்தில் உள்ள அனைத்து துன்பங்களில் இருந்தும், இடர்பாடுகளிருந்தும், இன்னல்களிலிருந்தும் மாற்றி அமைக்க வல்லது.

🎲 *இன்றைய பண்புப்பயிற்சி*

🎲 எதை செய்தாலும் ஏன்? எதற்கு? எதனால்? என்ற சிந்தனையோடும் தெளிந்த மனவிளக்கத்தோடும் செய்தல் வேண்டும். மேற்கொண்டு நற்செயல்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். விளைவு அறியாமல் நாம் செய்யும் செயல்கள் நமக்கு இன்பத்தையும், துன்பத்தையும், உணர்ச்சிவயப்பட்ட நிலையையும் உருவாக்கும். இது மனதின் நிலையற்ற தன்மையாகும். மனம் இவ்வாறு அடிக்கடி நிலையற்ற தன்மைகளில் இயங்கினால் நம்மால் நம்முடைய உயிரையும், அறிவையும், இறைவனையும் உணர்வதற்கான வாய்ப்பு தள்ளிப் போடப்பட்டு கொண்டே இருக்கும். இறைவனை உணர்வதற்கான முயற்சியில் நம்மால் முன்னேற்றம் என்பதை ஏற்படுத்திக்கொள்ள முடியாது. ஆகவே நிலையான தன்மையில் மனதை எப்போதும் இயக்கி பழக்குவோமாக.
நாமும் நம் குடும்பமும் நலமும் வளமும் பெற, வாழ்க வளமுடன்...

🎲 *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். கிரகண நாளாக இருந்தால் கிரகண நேரத்தில் பஞ்சபூத நவகிரக தவம் செய்வது சிறப்பு. இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🎲 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🎲 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments