வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூலை 29
🔺☘️🔺☘️🔺☘️🔺☘️🔺☘️🔺
🎲 இன்றைய நித்தியக்கடன்
🎲 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎲 இன்றைய சாதகம்
🎲 வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
🎲 இன்றைய நற்சிந்தனை
🎲 உடலில் மனதில் இருக்கும் நோய்களுக்கு வெளியிலிருந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதற்குப் பெயர் மருத்துவம். அதே உடலில் மனதில் இருக்கும் நோய்களுக்கு நமக்கு நாமே சிகிச்சை செய்து கொண்டால் அதற்குப் பெயர் தான் மனவளக்கலை யோகா. வெளியே மட்டும் தெய்வம் இருக்கிறது, என்று நம்பி உருவ வழிபாட்டின் மூலம் வணங்கும்போது அதற்குப் பெயர் பக்திமார்க்கம். அதே தெய்வத்தை மனதின் மூலம் உணர்ந்து உடலை உயிரை அறிவை மதித்து வணங்கி வாழும்போது அதற்குப் பெயர் தான் ஞானயோகம், மனவளக்கலை.
🎲 இன்றைய தற்சோதனை
🎲 இந்த தெளிவான சிந்தனை ஓட்டத்தின் கீழ் உங்களுடைய, வாழ்வியல் விஞ்ஞானத்தை உள்ளதை உள்ளவாறு உணர்ந்து கொள்வதற்கு, எப்போதும் அயரா விழிப்பு நிலையோடு இருந்து திட்டமிட்டு செயல்களை ஒழுங்குபடுத்திக் கொண்டு, வாழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு இந்த தற்சோதனை பயிற்சிமுறை நமக்கு மிகவும் பயனுடையதாக அமைகிறது. இதனால் மறைபொருள்கள் அனைத்தையும் மனதில் உணரக்கூடிய திறமையும் ஆற்றலும் மேலோங்குகிறது.
🎲 இன்றைய பண்புப்பயிற்சி
🎲 மனிதனுக்குள் பலவிதமான சிறப்பு தன்மைகள் உள்ளடங்கி இருக்கின்றன. அவைகளை முறையான பயிற்சி மூலம் தான் வெளியில் கொண்டுவர முடியும். உயிருக்கு மத்தியில் இருக்கும் உண்மைகளை மனதிற்கு கொண்டுவருவதற்கு, நாம் நம்முடைய கர்மேந்திரியங்களையும், ஞானேந்திரியங்களையும் பயன்படுத்தும்போதும் எண்ணம், சொல், செயல் இவை வழியாக உண்மையாக வாழும்போதும் உயிருக்கு மத்தியில் இருக்கும், அந்த உண்மையை உணர்ந்து கொள்ளவும், அதனோடு இரண்டற கலந்து வாழவும் முடிகிறது. வாழ்க வளமுடன்...
🎲 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். கிரகண நாளாக இருந்தால் கிரகண நேரத்தில் பஞ்சபூத நவகிரக தவம் செய்வது சிறப்பு. இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🎲 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🎲 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment