🌀🔶🌀🔶🌀🔶🌀🔶🌀🔶🌀
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜூலை 27*
🌀🔶🌀🔶🌀🔶🌀🔶🌀🔶🌀
🔰 *இன்றைய நித்தியக்கடன்*
🔰 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔰 *இன்றைய சாதகம்*
🔰 புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🔰 *இன்றைய நற்சிந்தனை*
🔰 ஒன்றை தேடி உயிர் எப்போதும் பயணம் செய்துகொண்டே இருக்கிறது. உயிர், மனம், உடல் இந்த மூன்றும் ஒருங்கிணைந்து இயங்கக்கூடிய இயக்க முறைக்கு பெயர்தான் வாழ்க்கையாகும். உயிரோ தன்னுடைய மூலத்தைத் தேடி ஓடுகிறது, மனமோ புலன்வயப்பட்ட நிலையில் மயங்கி இயங்குகிறது. மனதினுடைய போக்கு வேறாகவும், உயிரினுடைய போக்கு வேறாகவும், இருக்கும்போது அந்த இடத்தில் ஏற்படுவதுதான் அனைத்து சிக்கல்களுமாகும். உடலில் ஏற்படும் நோய்களுக்கும், மனதில் ஏற்படும் குழப்பங்களுக்கும், வாழ்க்கையில் உருவாகும் சிக்கல்களுக்கும் இது மட்டுமே காரணம்.
🔰 *இன்றைய தற்சோதனை*
🔰 வாழ்க்கையின் அமைப்பும் உடலின் இயக்கமும், ஒரு மொட்டு எப்படி மெதுவாக மலருமோ அந்த நிகழ்ச்சிக்கு ஒப்பானது, இந்த வாழ்க்கை அமைப்பு. மெதுவாக நிதானமாக மலர்ந்து கொண்டே இருக்கும். நம்முடைய அவசரத்துக்கும் தேவைக்கும் நம் வாழ்க்கையில் எந்த ஒன்றும் உடனடியாக நடைபெற்று விடாது, என்ற உண்மையை உணர்வோமாக. இயற்கைக்கு பொருத்தமான நிகழ்ச்சிகளில் நம்மை பொறுமையாக இணைத்துக் கொண்டு நிறைவாக வாழ முயற்சி செய்வோம்.
🔰 *இன்றைய பண்புப்பயிற்சி*
🔰 விளம்பர வாழ்க்கையில் மயங்கி விடாமல் மனதைப் பண்படுத்தி உயிர்ப்போடு வாழும் முயற்சிக்கு, நம்மை முழுமையாக அர்ப்பணித்து படிப்படியாக நாம் பெறக்கூடிய வெற்றிகள் தான் உண்மையான வாழ்க்கையாகும். மாயையிலிருந்தும், மயக்கத்திலிருந்தும், நம்மை விடுவித்துக் கொள்ளும் பெரும் பொறுப்பும், கடமையும் நமக்கு இருக்கிறது. நம்மை பார்த்து நம்முடைய சந்ததிகளும் இதே வழியில் வாழ முயற்சி செய்வார்கள். ஆக மிகுந்த பொறுப்போடு இருந்து, உயிருக்கான கடமையை நிறைவாக செய்து, வாழ்வில் நிறைவு பெறுவோமாக. வாழ்க வளமுடன்...
🔰 *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். கிரகண நாளாக இருந்தால் கிரகண நேரத்தில் பஞ்சபூத நவகிரக தவம் செய்வது சிறப்பு. இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🔰 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🔰 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment