நித்தியக்கடன் ஜூலை 26 2022

♻️🕸️♻️🕸️♻️🕸️♻️🕸️♻️🕸️♻️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜூலை 26*

♻️🕸️♻️🕸️♻️🕸️♻️🕸️♻️🕸️♻️

⚛️ *இன்றைய நித்தியக்கடன்*

⚛️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

⚛️ *இன்றைய சாதகம்*

⚛️ செவ்வாய்கிழமை 
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
 
⚛️ *இன்றைய நற்சிந்தனை*

⚛️ மனித உடல் மூன்று பிரிவுகளாக இயங்குகிறது. அவை முறையாக
பருவுடல், நுண்ணுடல், காந்த உடலாகும். இந்த மூன்று உடல்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது "நுண்ணுடல்" தான். பருஉடலுக்கும், காந்த உடலுக்கும் அடிப்படையாக இருந்து இயங்குவது நுண்ணுடல் என்ற உயிருடலாகும். உயிர் தான் உடலை இயக்குகிறது. உயிரினுடைய அடர்த்திக்கும், இயக்க சீரமைப்பிற்கும் தக்கவாறு மன இயக்கம் அமைகிறது. இந்த உயிருக்கு உகந்த கோட்பாட்டில் உங்களுடைய செயல்பாடுகளை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும், என்பதே இயற்கையின் சட்டமாகும், இறைநீதியாகும்.

⚛️ *இன்றைய தற்சோதனை*

⚛️ உயிரைப் பற்றிய விளக்கங்கள் தெரியாமல், அது என்னவென்று புரிந்து கொள்ளாமல், மனிதர்கள் ஒரு நாளும், ஒரு பொழுதும், அமைதியாக, இருக்கவோ, வாழவோ முடியாது. ஏனெனில் உயிரே அனைத்துக்கும் அடிப்படையான மூலக்கூறு ஆகும். உங்களுக்கே தெரியாமல் நீங்கள் உயிரை தான் பல்வேறு வகையான தூண்டுதலின் பேரில் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த தூண்டுதல்கள் அனைத்தும் உயிரை உணர்வதற்கான தூண்டுதல். புலன்வழி தூண்டுதல்கள் அனைத்தும் உயிரை சென்று சேர்வதற்கான தூண்டுதல்களே ஆகும். தற்சோதனை ஒன்றுதான் உங்களை நீங்களே வழி நடத்தும் திறமையை வளர்க்கும் சிறப்பான செயலாகும்.

⚛️ *இன்றைய பண்புப்பயிற்சி*

⚛️ நாம் இன்று பாடுபட்டு சேர்க்கும் பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் இவை அனைத்தும் ஒரு காலகட்டத்திற்கு அப்பால் நமக்கு தேவை இல்லாமல் போகும். உடல் வலுவும், வாழும் திறனும் இருக்கும்போதே உயிரைப் பற்றிய உண்மைகளை தேடல்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதன் விளைவாக நமக்கு எல்லா வகையிலும் அமைதியும் நிறைவும் அமையும். இந்த உயிரை உணரும் பண்பு உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகும். இப்பண்பில் உயர்ந்தால் தான் தனிமனித அமைதியும் உலக அமைதியும் அமையும். வாழ்க வளமுடன்...

⚛️ *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். கிரகண நாளாக இருந்தால் கிரகண நேரத்தில் பஞ்சபூத நவகிரக தவம் செய்வது சிறப்பு. இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

⚛️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

⚛️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments