🌀🎲🌀🎲🌀🎲🌀🎲🌀🎲🌀
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜூலை 07*
🌀🎲🌀🎲🌀🎲🌀🎲🌀🎲🌀
🔶 *இன்றைய நித்தியக்கடன்*
🔶 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔶 *இன்றைய சாதகம்*
🔶 வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🔶 *இன்றைய நற்சிந்தனை*
🔶 வெளிப்படையாக இல்லாத ஒரு மனிதர் ஆட்சியாளராகவும், தொழிலதிபராகவும், சமுதாயத்தில் உயர் பதவி வகிப்பவராகவும், இருந்தால் அவருடைய குடும்பம் நண்பர்கள் அவரோடு நேரடியாகவும், மறைமுகமாகவும், தொடர்பில் உள்ளவர்கள் என அனைவரும் இதனால் பெரியதொரு பாதிப்பை, இன்னல்களை, இடர்பாடுகளை சந்திக்கவே செய்வார்கள். ஒரு காலம் போல மற்றொரு காலம் இருக்காது. இந்த வெளிப்படை இல்லாத தன்மை நம்மிடையே இருக்குமேயானால், நம்முடைய வாழ்க்கை என்பது கானல்நீர் போலவும் கத்திமேல் நடப்பது போலவும் இருக்கும்.
🔶 *இன்றைய தற்சோதனை*
🔶 இன்று உலகில் இருக்கும் அனைத்து வகையான சிக்கல்களுக்கும் முக்கிய காரணமாக இருப்பது, இந்த வெளிப்படைத்தன்மை இல்லாததேயாகும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி, சுற்றத்தாரை நம்பவைத்து சுயநல சிந்தனையை பின்புறத்தில் கொண்டு பொதுநலம் பேசுவார்கள். இதன் வழியாக நல்லொழுக்க பண்பாளராக தன்னை இந்த சமுதாயத்துக்கு அடையாளம் காட்டிக் கொள்வார்கள். இந்த நிலைபாடு (status) தனக்கும் தன்னோடு இருப்பவர் எவருக்கும் நல்ல வாழ்க்கையாக அமையப் போவதில்லை.
🔶 *இன்றைய பண்புப்பயிற்சி*
🔶 அனைவரோடும் வெளிப்படையாக வாழக்கூடிய பண்பில் உயரவேண்டும். மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத அளவிற்கு உள்ள நம்முடைய சிந்தனை செயல்பாடு பழக்கவழக்கம், அனைத்தையும் அறவே களைந்து கொண்டு நேர்மையோடும் வெளிப்படையாகவும், வாழும் பண்பில் உயர்வோம் "தீதும் நன்றும் பிறர் தர வாரா, யாதும் ஊரே யாவரும் கேளீர்" கவிஞர் பூங்குன்றனார் வாழ்க வளமுடன்...
🔶 *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். கிரகண நாளாக இருந்தால் கிரகண நேரத்தில் பஞ்சபூத நவகிரக தவம் செய்வது சிறப்பு. இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🔶 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🔶 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment