🎲🎑🎲🎑🎲🎑🎲🎑🎲🎑🎲
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜூன் 06*
🎲🎑🎲🎑🎲🎑🎲🎑🎲🎑🎲
🔶 *இன்றைய நித்தியக்கடன்*
🔶 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔶 *இன்றைய சாதகம்*
🔶 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🔶 *இன்றைய நற்சிந்தனை*
🔶 முழுக்க முழுக்க கணினியால் உருவாக்கப்பட்ட ஒரு வளாகத்தில் கணினி கட்டுப்பட்டு அரை எப்படி பாதுகாக்கப்படுமோ, அதுபோல நம் உடலில் இருக்கக்கூடிய கருமையம் பாதுகாக்கப் பட வேண்டும். உயிர் தான் நம் உடலில் தியாக உணர்வோடு இருந்து செயல்படுகிறது. நம்முடைய கருமையத்தில் நீண்ட நெடிய தரவுகள் (Data) இருக்கின்றன. இவை அனைத்தையும் எடுத்து பிரித்து உணர்வதற்கும் பார்ப்பதற்கும் நமக்கு போதிய மனப்பக்குவமும் அறிவு நுட்பமும் தேவை. இவை இல்லாமல் இந்த தகவல்களை (Data) நம்மால் பயன்படுத்த இயலாது. இறைநிலையின் தன் மாற்ற சரித்திரம் அனைத்தையும் தனக்குள் இருப்பாக வைத்திருக்கும் தகவல் பெட்டகம் நம்முடைய கருமையம்.
🔶 *இன்றைய தற்சோதனை*
🔶 உயிர் தன்னிடத்தில் பலவிதமான புதினங்களை வைத்துள்ளது. கருமையமும், உயிரும் அதனுடைய இயல்பான தன்மையில் முழுமையாக உடலில் இயங்கினால் எந்த விதமான சிக்கல்களும் உருவாகாது. எந்த ஒரு சிக்கலுக்கும் தீர்வு உடனடியாக உணரப்படும். உயிரையும் மனதையும் உணரமுடியாமல் கருமையத்தில் உள்ள உண்மைகள் மற்றும் அதன் விளக்கம் தெரியாமல் இன்றைய மனித சமுதாயம் மயக்கத்தில் வாழத் துவங்கி, மயக்கத்தில் பயணம் செய்யது, மயக்கத்திலேயே முடிந்துவிடுகிறது. இந்த நிலை மாறவேண்டும்...
🔶 *இன்றைய பண்புப்பயிற்சி*
🔶 உயிரைப் பற்றிய கருமையத்தைப் பற்றிய உண்மைகளை உணர்வதற்கு, தன்னை எப்போதும் ஆர்வத்தோடும் முனைப்போடும் வைத்துக்கொள்ள வேண்டும். உயிரை உணர்வதற்கான மனதையும் அந்த தன்மையில் பழக்க வேண்டும். விட்டுக் கொடுத்தல், சகிப்புத்தன்மை, தியாகம் போன்ற பண்புகளால் உயிரை உணர்வதற்கான மனப்பக்குவம் உருவாகும். படிப்படியாக தன்னை தற்சோதனையில் ஈடுபடுத்திக்கொண்டு, இந்த சிறந்த பண்புகளை திட்டமிட்டு வளர்த்துக் கொள்ளும் போது ஆத்ம தரிசனம் கிட்டும். வாழ்க வளமுடன்...
🔶 *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். கிரகண நாளாக இருந்தால் கிரகண நேரத்தில் பஞ்சபூத நவகிரக தவம் செய்வது சிறப்பு. இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🔶 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🔶 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment