💯💠💯💠💯💠💯💠💯💠💯
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜூன் 05*
💯💠💯💠💯💠💯💠💯💠💯
🔰 *இன்றைய நித்தியக்கடன்*
🔰 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔰 *இன்றைய சாதகம்*
🔰 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🔰 *இன்றைய நற்சிந்தனை*
🔰 எப்போது எப்போதெல்லாம் உங்களுக்கு மிகப்பிடித்த சூழ்நிலையிலும், செயலிலும் உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொள்கிறீர்களோ, அப்போது அப்போதெல்லாம் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது. இந்த மகிழ்ச்சி உண்மைதான், ஆனால் இந்த "இனம் புரியாத" என்ற உணர்வை நாம் இனம் கண்டு கொள்ள வேண்டும், அதை அப்படியே விட்டுவிடக் கூடாது. அதனை அப்படியே விட்டு விட்டால் நம்மை திசை மாற்றி விடும், ஒழுங்கற்ற செயல்கள் நம்மில் தூண்டப்படும். இதனை நம் முன்னோர்கள் சிற்றின்பம் என்ற வார்த்தையினால் அடையாளப்படுத்துகிறார்கள்.
🔰 *இன்றைய தற்சோதனை*
🔰 இதை புரிந்து கொள்ள முடியாதா? என்றால் புரிந்து கொண்டு தான் ஆக வேண்டும். இதனை புரிந்து கொள்ளாமல் நம்முடைய வாழ்க்கையை ஆரோக்கியமாக, ஆறாவது அறிவில் முழுமை பெறும் விதமாக வாழ முடியாது. இந்த இனம்புரியாத மகிழ்ச்சியும், மனநிறைவும், நம்முடைய மூளை செல்களில் ஏற்படக்கூடிய ரசாயன மாற்றம், பழைய பதிவுகளில் இணைப்பு, அவைகளினுடைய ஆதிக்கம், சஞ்சிதா, ஆகாமிய கர்மவினைகளின் தூண்டல். தற்சோதனை வழியாக இவைகளை சந்தித்து, சிந்தித்து, சீர்திருத்தம் செய்வோம்.
🔰 *இன்றைய பண்புப்பயிற்சி*
🔰 நீங்கள் மகிழ்ச்சியாக இருந்த அத்தனை சம்பவங்களையும், சூழ்நிலைகளையும், பின்னோக்கி சிந்தித்துப் பாருங்கள், உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இந்த அளவற்ற மகிழ்ச்சி, இனம் புரியாத சந்தோசத்தையும் அனுபவித்திருப்பீர்கள். நிரந்தரமான மகிழ்ச்சி என்பது திட்டமிட்டுக் கொண்டு, ஆறாவது அறிவில் முழுமை பெறுவது. திட்டமிட்டு செயலாற்றும் போது உங்களை நீங்களே கண்காணிக்கிறார்கள், அயராவிழிப்பு நிலை உருவாகிறது. இந்தப் பண்பே ஞானத்தில் நம்மை உயர்த்த வல்லதாகும். நிரந்தரமான மகிழ்ச்சி, பேரின்பம், ஆறாவது அறிவில் முழுமை பெருதல் இதில் நாலனளுக்கு நாள் உயர்வு பெறுவோம். வாழ்க வளமுடன்...
🔰 *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். கிரகண நாளாக இருந்தால் கிரகண நேரத்தில் பஞ்சபூத நவகிரக தவம் செய்வது சிறப்பு. இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🔰 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🔰 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment