நித்தியக்கடன் ஜூலை 01 2022

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜூலை 01


💢🚥💢🚥💢🚥💢🚥💢🚥💢


⛳ இன்றைய நித்தியக்கடன்


⛳ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


⛳ இன்றைய சாதகம்


⛳ வெள்ளிகிழமை 

காலை, மாலை இரண்டு 

வேளையும் சாந்தி தவம்.

 

⛳ இன்றைய நற்சிந்தனை


⛳ வேண்டா வெறுப்புடன் ஒரு செயலில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் போது அதனுடைய விளைவு நம் உடலிலும், உயிரிலும், மனதிலும், ஒவ்வாமையை, பொருந்தா உணர்வை ஏற்படுத்துகிறது. இது இயற்கையினுடைய சட்டம், இந்த சட்டத்தை எவர் ஒருவராலும் மாற்றிவிட முடியாது. சட்டத்தை மதித்து வேண்டா வெறுப்பாக எந்த ஒரு செயலையும் செய்யாமல் நம்முடைய எண்ணம், சொல், செயல் மூன்றையும் எப்போதும் மனமுவந்து விருப்பத்தோடு செய்யும், ஆக்கத்துறையில் நம் அறிவை செலுத்தி ஊக்கமுடன் அதற்காக உழைக்க வேண்டும்.


⛳ இன்றைய தற்சோதனை


⛳ இயற்கையினுடைய பல்வேறு உண்மைகளை எல்லாம் உணர்ந்து கொள்வதற்கு மனதை எப்போதும் நுணுக்கமான நிலையில் வைத்து ஆராய்ச்சி செய்து பழகுங்கள். இந்த தற்சோதனை பழக்கமானது நம்மை நாளடைவில் உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும். இயற்கையை மதிக்கக்கூடிய பண்பில் நாம் கட்டாயம் உயர்வோம். மேலும் போலியான வாழ்க்கைக்கும் நிஜமான வாழ்க்கைக்கும் வேறுபாடுகளை நம்மால் தெளிவாக உணர முடியும். இது தற்சோதனைக்கு பின் நம் அறிவில் ஏற்படும் தெளிவான விளைவாகும்.


⛳ இன்றைய பண்புப்பயிற்சி


⛳ "சிறுதுளி பெருவெள்ளம்" என்ற பழமொழிக்கு ஏற்ப நமக்குள் சிறுக சிறுக நம்மை பண்படுத்திக்கொண்டே பண்பான செயல்களை தற்சோதனையால், மேலும் மேலும் அதிகரித்துக்கொள்ள நமக்குள் விரிவடையும் உயிரின் நிஜமான இயக்க அமைப்பையும், உயிர் நம் உடலில் செயல்படும் விதத்தையும் ஆய்வு செய்யுங்கள். உயிர் தன்னுடைய மூலத்தோடு தொடர்பு கொள்ளக்கூடிய செயல்களில் இயங்கினால் தான், அதற்கு நாம் வாய்ப்பு கொடுத்தால் தான், நம்மால் நிம்மதியாக உறங்கவும் காலையில் எழுந்து வாழ்க்கை கடமைகளை சரியாக செய்யவும் முடியும். வாழ்க வளமுடன்...


⛳ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். கிரகண நாளாக இருந்தால் கிரகண நேரத்தில் பஞ்சபூத நவகிரக தவம் செய்வது சிறப்பு. இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


⛳ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


⛳ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு

Vethathiriyam for world peace

www.vethathiri.edu.in

https://facebook.com/skyyogatv


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments