நித்தியக்கடன் மே 30 2022

♨️💦♨️💦♨️💦♨️💦♨️💦♨️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மே 30*

♨️💦♨️💦♨️💦♨️💦♨️💦♨️

🌐 *இன்றைய நித்தியக்கடன்*

🌐 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🌐 *இன்றைய சாதகம்*

🌐 திங்கட்கிழமை 
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.
 
🌐 *இன்றைய நற்சிந்தனை*

🌐 மாற்றங்களை அடிப்படையாக கொண்டு, மாற்றங்களை மட்டுமே தன்னுடைய இயல்பான நிலையாக வைத்து, இதனுடைய அடிப்படையில் இந்த பிரபஞ்சத்தையும் உயிரினங்களையும் அதனதனில் அறிவாக இருந்து சுத்தவெளி இயற்கை எனும் பேராற்றல் இயக்கிக் கொண்டிருக்கிறது. இறை நிலையின் இயக்கங்களில் எந்த ஒரு தவறும் நிகழ்வதற்கு வாய்ப்பு இல்லை. இதனை நாம் சரியாக உணர்ந்து கொள்வதற்கு நமக்கு போதிய மனப்பக்குவமும் அறிவு உயர்வும் தேவை. 

🌐 *இன்றைய தற்சோதனை*

🌐 செயலையும் விளைவையும் எடுத்துக் கொண்டு, ஒப்பிட்டு பார்த்து இந்த செயலுக்கு இது பொருத்தமான விளைவு இல்லை என்று முடிவு செய்து, ஒரு எல்லைக்குள் இருந்து தேடுவது விஞ்ஞானம். இந்த விஞ்ஞான கோட்பாடுகள் ஒரு காலகட்டத்தில் இருந்து இன்னொரு காலகட்டத்திற்கு பயணிக்கும் போது, இது மாறிக் கொண்டே இருக்கக் கூடியது தான். ஆக எதிர்வரும் காலங்களில் இந்த கோட்பாடுகள் உடைக்கப்படும். மெய்ஞான விஞ்ஞானங்கள் புதிதாக உருவாகும். அந்த கோட்பாடானது வேதாத்திரியத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும்.

🌐 *இன்றைய பண்புப்பயிற்சி*

🌐 அந்த பிரம்ம ஞான காலாத்தையும் சூழ்நிலைகளையும் மனதில் அறிவில் நினைந்து நினைந்து வாழ்த்தி வரவேற்போம். காலம் தாழ்த்தாமல் நலம் எல்லாம் ஒன்றுகூடி இவ்வையகம் வளமோடு வாழும் சூழ்நிலை உருவாகட்டும். உலக மக்கள் அனைவரது துன்பங்களும், துயரங்களும், வாழ்க்கை சிக்கல்களும் அடியோடு மறைந்து போகட்டும். பிரம்மஞானம் மனித அறிவில் மனதில் மலர்ந்து ஒளிவீசட்டும். வாழ்க வளமுடன்...
 
🌐 *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். கிரகண நாளாக இருந்தால் கிரகண நேரத்தில் பஞ்சபூத நவகிரக தவம் செய்வது சிறப்பு. இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌐 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌐 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments