நித்தியக்கடன் மே 12 2022

♻️🎱♻️🎱♻️🎱♻️🎱♻️🎱♻️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மே 12*

♻️🎱♻️🎱♻️🎱♻️🎱♻️🎱♻️

🔮 *இன்றைய நித்தியக்கடன்*

🔮 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🔮 *இன்றைய சாதகம்*

🔮 வியாழக்கிழமை 
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம், 
மாலை:- இறைநிலைதவம்.
 
🔮 *இன்றைய நற்சிந்தனை*

🔮 உணர்ச்சி வயம், ஆவேசம், சினம், கவலை இவைகளைப் போன்ற குணங்களை வெளிப்படுத்த நாம் தனியாக பயிற்சி ஒன்றை செய்து பழக வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இவையெல்லாம் நம்மோடு, நம் கூடவே பிறந்து வளர்ந்த குணங்கள். ஆனால் அமைதி, நிதானம், அன்பு, கருணை போன்ற குணங்களோடு வாழ்வதற்கு நாம் பயிற்சி செய்தே ஆக வேண்டும். தீமையில் இருந்து நன்மைக்கு நன்மை மாற்றி அமைத்துக் கொள்வதற்கான பயிற்சி முறை ஒன்று எல்லா வகையிலும் தேவையாக இருக்கிறது.

🔮 *இன்றைய தற்சோதனை*

🔮 நம்மோடு பிறந்து நம்மோடு வளர்ந்து நாம் வேறு அது வேறு என்ற நிலைகளை எல்லாம் கடந்து, நமக்குள் நாமாகவே இந்த விளங்கின தன்மைகளும் குணங்களும் இருக்கிறது. இவைகளிலிருந்து நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள சரியான சீரான பயிற்சி முறை தேவை. அந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே வர இதன் விளைவாக நமக்குள் நிறை மனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, சமநேர்நிறை உணர்வு, மன்னிப்பு போன்ற குணங்களில் உயர்வு பெறும்.

🔮 *இன்றைய பண்புப்பயிற்சி*

🔮 பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு, மனப்பான்மை, வஞ்சம் இந்த ஆறு குணங்கள் சீர்திருத்தம் செய்து கொள்ள கூடிய ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்தாலும், அதை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு பயன் பெறுவதற்கு எப்போதும் நாம் தயாராக இருக்க வேண்டும். உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் பண்பு நமக்குள் மேலோங்க மேலோங்க, அறுகுண சீரமைப்பு பெறுவதற்கான வாய்ப்பும் கிடைத்துக்கொண்டே இருக்கும். அவ்வாய்ப்பினை பயன்படுத்தி நாமும் நம் குடும்பமும் எல்லா வகையிலும் நலமும் வளமும் பெறுவோமாக. வாழ்க வளமுடன்...

🔮 *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். கிரகண நாளாக இருந்தால் கிரகண நேரத்தில் பஞ்சபூத நவகிரக தவம் செய்வது சிறப்பு. இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🔮 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🔮 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments