நித்தியக்கடன் மே 10 2022

🍥🎑🍥🎑🍥🎑🍥🎑🍥🎑🍥

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மே 10*

🍥🎑🍥🎑🍥🎑🍥🎑🍥🎑🍥

🍀 *இன்றைய நித்தியக்கடன்*

🍀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🍀 *இன்றைய சாதகம்*

🍀 செவ்வாய்கிழமை 
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
 
🍀 *இன்றைய நற்சிந்தனை*

🍀 கொதிக்கும் நீரில் அரிசியை போட்டால் அரிசி சிறிது நேரத்தில் சாதமாக தன்மாற்றம் பெறுகிறது. இதே கொதிக்கும் நீரில் ஒரு கருங்கல்லை போட்டால் அது எப்படியும் மாறாமல் அப்படியே இருக்கும். ஒரு அரிசி சூழ்நிலையைப் புரிந்து கொள்கிறது, விட்டுக் கொடுக்கிறது. கல் சூழ்நிலையை புரிந்து கொள்வதுமில்லை விட்டுக் கொடுப்பதுமில்லை. கல்லுக்கும், அரிசிக்கும் உள்ள தன்மை வேறு வேறு நம்முடைய மனம் எப்போதும் அரிசி போல இருக்க வேண்டும்.

🍀 *இன்றைய தற்சோதனை*

🍀 நீருக்கு தனக்குள்ளாக இடம் கொடுத்து அரிசி சாதமாக தன்மாற்றம் பெற்றது. நம்மை சுற்றி உள்ள நல்லவைகளுக்கு நாம் நமக்குள் இடம் கொடுக்க வேண்டும். மனதினுடைய உண்மை நிலை தன்மையை செயலாக்க படுத்துங்கள். சினம், உணர்ச்சிவயம், கவலை இந்த மூன்றும் மனதினுடைய உண்மை தன்மையை நிலை குலையச் செய்யும் நஞ்சாகும். தற்சோதனை மூலமாக நல்லவைகளை தேர்வு செய்து கொண்டு நல்லவைகளுக்கு இடம் கொடுத்து. உள்ளொளியைப் பெருக்கி கொண்டு வாழ்வோம்.

🍀 *இன்றைய பண்புப் பயிற்சி*

🍀 குளிர்ந்த தண்ணீரில் அரிசியை போட்டு வைத்தாலும் அது சாதமாக மாறாது. இருப்பினும் நீருக்கு தனக்குள் லேசாக இடம் கொடுக்கும். இறுகிய அரிசி சாதம் ஆக தன்மாற்றம் பெற வேண்டும் என்றால் அதற்கு வெப்பம் தேவைப்படுகிறது, உடல்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவை அனைத்திலும் சூடு உருவாகும். இது "ஞானச்சூடு" இது மனதை பதப்படுத்தும். இந்த ஞானச்சூட்டை அனுதினமும் ஏற்படுத்திக்கொள்ளுவோம். உள்ளொளியை பெருக்கிக் கொண்டு மனிதப்பண்பில் சிறந்து விளங்குவோம். வாழ்க வளமுடன்...
 
🍀 *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். கிரகண நாளாக இருந்தால் கிரகண நேரத்தில் பஞ்சபூத நவகிரக தவம் செய்வது சிறப்பு. இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🍀 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🍀 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments