🔶🍒🔶🍒🔶🍒🔶🍒🔶🍒🔶
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மே 04*
🔶🍒🔶🍒🔶🍒🔶🍒🔶🍒🔶
🖼️ *இன்றைய நித்தியக்கடன்*
🖼️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🖼️ *இன்றைய சாதகம்*
🖼️ புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🖼️ *இன்றைய நற்சிந்தனை*
🖼️ தன்னார்வத்தோடு நாம் ஒன்றை தேடி பல வகையிலும் முயற்சி செய்கின்றோம். இந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறலாம், வெற்றி பெறுவதற்கு காலதாமதமுமாகலாம். நம்முடைய தேடல் என்பது சூழ்நிலையால் கருமையத்தில் இருந்து இறைநிலையால் தூண்டபட்டதாகும். பல காரணங்களால் இந்த தேடலுக்கான விடை கிடைப்பதில் தடைகளும் இடையூருகளும் அமையும். இருப்பினும் நாம் ஒன்றை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அது என்னவென்றால்...
🖼️ *இன்றைய தற்சோதனை*
🖼️ அறநெறியைப் பின்பற்றி நாம் தேடும் எந்த ஒரு தேடலுக்கும் காலத்தால் சரியான விளைவு என்பது அமைந்தே தீரும். உடற்பயிற்சி, காயகற்பம், தவம், தற்சோதனை இந்த நான்கிலும் தன்னை ஆழமாக ஈடுபடுத்திக் கொண்டு வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறிய அனைத்து வழிமுறைகளிலும் தன்னுடைய உடலை, மனதை, உயிரை வளமான நிலையிலேயே வைத்து பராமரித்து வாழும் எவர் ஒருவருக்கும், இந்த பிரபஞ்சவெளியில் இன்னொரு உண்மை பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த உண்மை என்ன?
🖼️ *இன்றைய பண்புப்பயிற்சி*
🖼️ நாம் ஒரு உண்மையை தேடுகிறோம், இந்த பிரபஞ்சத்தில் நம்மை ஒரு உண்மை தேடிக் கொண்டிருக்கிறது, நம்மை தேடி வரக்கூடிய உண்மைகளை நாம் ஈர்த்துக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கு மகரிஷி அவர்கள் கூறிய வாழ்க்கை நெறியும் பயிற்சிமுறையும் சிறப்பானதொரு அமைப்பை உருவாக்கிக் கொடுக்கிறது. இதற்காக நாம் பெரியதாக எதையும் செய்யவும் சிந்திக்கவும் தேவையில்லை. அன்றாட வாழ்க்கையை பிழையின்றி வாழ்ந்து உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை செய்து பழகி தானும் தன் குடும்பமும் சமுதாயமும் நலமுற வாழ தொண்டு செய்வேண்டும். வாழ்க வளமுடன்...
🖼️ *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். கிரகண நாளாக இருந்தால் கிரகண நேரத்தில் பஞ்சபூத நவகிரக தவம் செய்வது சிறப்பு. இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🖼️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🖼️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment