நித்தியக்கடன் ஏப்ரல் 21 2022

🕸️🚥🕸️🚥🕸️🚥🕸️🚥🕸️🚥🕸️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஏப்ரல் 21*

🕸️🚥🕸️🚥🕸️🚥🕸️🚥🕸️🚥🕸️

⛳ *இன்றைய நித்தியக்கடன்*

⛳ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

⛳ *இன்றைய சாதகம்*

⛳ வியாழக்கிழமை 
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம், 
மாலை:- இறைநிலைதவம்.
 
⛳ *இன்றைய நற்சிந்தனை*

⛳ ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கை அமைப்பை நேரடியாகவும், மறைமுகமாகவும் அவரவர்களுடைய உடலை சுற்றி இருக்கும் காந்தக் களம் தீர்மானிக்கிறது. இதைத்தான் ஆரா என்று சொல்கிறோம். இதன் அடர்த்தி நிலையே இந்த உடலுக்குள் எந்த அலை இயக்கம் வர வேண்டும், எதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. இந்த உயிர் காந்த அடர்த்தி நிலையாகிய ஆராவை நாம் எப்படி வளமாக வைத்துக் கொள்வது.

⛳ *இன்றைய தற்சோதனை*

⛳ ஜீவகாந்தம் போதிய அளவு உடலில் நிரம்பி செறிவு பெற்று நிற்கும்போது, இந்த ஆராவானது நம் உடலை சுற்றி அடர்த்தியாக எப்போதும் இருக்கும். நாம் உணர்ச்சி வயப்படும் போதும் கவலை, பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் இவ் வகையான எண்ணங்களுக்கும், செயல்களுக்கும் நமக்குள் இடம் கொடுத்தால் இந்த ஆராவானது சிதைந்துவிடும். இதன் விளைவாக நாம் பாதுகாப்பு அமைப்பிலிருந்து விலகி விடுகிறோம்.

⛳ *இன்றைய பண்புப்பயிற்சி*

⛳ நமக்கு பாதுகாப்பு அளிக்கக் கூடிய முறையில் அமைந்திருப்பது இந்த ஆராதான். இதற்கு நல்ல எண்ணங்களையும், குணநல பண்பையும் ஏற்றுக்கொண்டு, அதன் வழியாகவே வாழக்கூடிய முறையை உருவாக்கிக் கொள்ளவேண்டும். உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை, நிறைமனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, சம உணர்வு, மன்னிப்பு போன்ற பண்புகளும் பயிற்சிகளும் நம் உடலை சுற்றி இருக்கக்கூடிய ஆராவை அடர்த்தியாக வைத்துக் கொள்கிறது. நம்மை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்கான பயிற்சியையும், வழிமுறைகளையும் ஏற்றுக்கொண்டு வாழ்வோம். வாழ்க வளமுடன்...

⛳ *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். கிரகண நாளாக இருந்தால் கிரகண நேரத்தில் பஞ்சபூத நவகிரக தவம் செய்வது சிறப்பு. இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

⛳ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

⛳ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments