நித்தியக்கடன் ஏப்ரல் 14 2022

🔮⬜🔮⬜🔮⬜🔮⬜🔮⬜🔮

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஏப்ரல் 14*

🔮⬜🔮⬜🔮⬜🔮⬜🔮⬜🔮

🍒 *இன்றைய நித்தியக்கடன்*

🍒 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🍒 *இன்றைய சாதகம்*

🍒வியாழக்கிழமை 
காலை:- ஒன்பது மையம், 
மாலை:- நித்யானந்தம்.
 
🍒 *இன்றைய நற்சிந்தனை*

🍒 இந்த உலக வரலாற்றை கூர்ந்து கவனிக்கும்போது இன்று நாம் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொன்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள ஆகும். அனைத்தும் துவக்கத்தில் பலவிதமான தோல்விகளை கண்டபின் காலத்துக்கு காலம் படிப்படியாக மாற்றி மேன்மைப் படுத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டது ஆகும். இதனுடைய அடிப்படையில் நாம் இன்று புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்.

🍒 *இன்றைய தற்சோதனை*

🍒 கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றைத்தான் ஒழுங்குபடுத்தி அதை முறையாக பயன்படுத்த முடியும் என்ற உண்மை இப்போது தெளிவாக புரிந்திருக்கும். மனதை கண்டுபிடித்தால் மட்டும்தான் அதை முறைப்படுத்த முடியும். மனம் சுழல்கிறது, விரிகிறது, சுருங்குகிறது, ஓடுகிறது இவையெல்லாம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை கண்டறியாத வரை, அதனுடைய ஓட்டத்தை, வேகத்தை, இயக்கத்தை எதுவும் செய்ய இயலாது. நான் என் மனதை கண்டு பிடித்து விட்டேன். அந்த மகிழ்ச்சியோடு நீங்களும் கண்டுபிடிப்பதற்காக இந்த வாசகங்களை பதிவிடுகிறேன் முழுநம்பிக்கையோடும், நிறைவான தற்சோதனையோடும், மனவளக்கலை பயிற்சியினால்.

🍒 *இன்றைய பண்புப் பயிற்சி*

🍒 மனிதன் வாழ்க்கை முழுமை பெற வேண்டுமானால் அந்த வாழ்க்கையில் தொடர்புடைய அனைத்தையும் மனிதர்கள் உணர்ந்து தெளிவு பெற வேண்டும். அதனை உணராத வரையில் வாழ்க்கை முழுமை பெறாது. இந்த வாழ்க்கையோடு தொடர்புடைய ஒவ்வொன்றையும் கண்டுபிடியுங்கள். அதனை கண்டறியக்கூடிய முறையான பயிற்சியில், எப்போதும் நம்மை நாம் ஈடுபடுத்திக் கொள்வது என்ற பண்பில் சிறந்து விளங்குவோமாக. வாழ்க வளமுடன்...
 
🍒 *குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🍒 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🍒 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments