🌐🎲🌐🎲🌐🎲🌐🎲🌐🎲🌐
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஏப்ரல் 11*
🌐🎲🌐🎲🌐🎲🌐🎲🌐🎲🌐
🕸️ *இன்றைய நித்தியக்கடன்*
🕸️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🕸️ *இன்றைய சாதகம்*
🕸️ திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🕸️ *இன்றைய நற்சிந்தனை*
🕸️ இயற்கையினுடைய உன்னதமான பொருளோடு மட்டுமே மனம் இணைந்து தங்கி இயங்க வேண்டும். இந்த தூய்மையான பொருளோடு இணைந்து இயங்கும் போது மனதிற்கு புதியதொரு வழிகாட்டுதலும், பண்பும், சகிப்புத் தன்மை, தியாக உணர்வுகளும் மேலோங்குகிறது. வான்காந்தம் சுத்தவெளி, பஞ்சபூதம், கோள்களின் அலைகளான இந்த உன்னதமான தூய பொருளோடு இணையும்போது மனம் மதிப்புடையதாக உயர்வு பெறுகிறது.
🕸️ *இன்றைய தற்சோதனை*
🕸️ தேவையில்லாத பொருள்களோடும், எண்ணங்களோடும், சூழ்நிலைகளோடும், மனம் தேக்கம் ஆகும் போது அதனுடைய தன்மை மனதை நோய் தன்மைக்கு அழைத்துச் சென்று, உடல் செல்களையும் உயிரையும் சிதைவடைய செய்துவிடுகிறது. இது தான் உடல் நோயாகவும் மன நோய்யாகவும் நாம் அதை உணர்கின்றோம். இவைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள, தூய ஆற்றலோடு மனம் இணைந்து தங்கி இயங்கிப் பழக்கப்படுத்த வேண்டும். இத்தகையதொரு பழக்கமே மனவளக்கலை பயிற்சி முறைகளாகும்.
🕸️ *இன்றைய பண்புப்பயிற்சி*
🕸️ மனதை மதிப்புடைய பொருள்களோடு இணைத்து பழக்கும்போது, மனதிற்கு மதிப்பான சிந்தனைகளும் செயல்பாடுகளும் உருவாகும். வாழ்க்கையும் மதிப்பான நிலைக்கு உயர்வு பெறும். மனதை கீழ்பட்ட நிலைகளில் இயக்கி பழகினால் இந்த பழக்கத்தின் பின் விளைவாக, நம் கருமையத்தில் இருக்கும், விலங்கின பதிவுகள் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிடும். நல் வினைப் பதிவுகள் ஆதிக்கம் நமக்கு நன்மையே செய்யும். விலங்கின பதிவுகளின் ஆதிக்கம் நம் உடலையும் மனதையும் வாழ்க்கையையும் பெரும் சிக்கல்களுக்குள் சிக்கவைத்து விடும். இவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்ள மனதை தூய வெளி சக்தியோடு இணைத்து பழகுவோம். வாழ்க வளமுடன்...
🕸️ *இன்றைய மூலிகை*
🕸️ *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🕸️ இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
🕸️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🕸️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🕸️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🕸️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment