நித்தியக்கடன் ஏப்ரல் 10 2022

🚥🎱🚥🎱🚥🎱🚥🎱🚥🎱🚥

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஏப்ரல் 10*

🚥🎱🚥🎱🚥🎱🚥🎱🚥🎱🚥

🖼️ *இன்றைய நித்தியக்கடன்*

🖼️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🖼️ *இன்றைய சாதகம்*

🖼️ ஞாயிற்றுகிழமை 
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 
மாலை:- இறைநிலை தவம்.
 
🖼️ *இன்றைய நற்சிந்தனை*

🖼️ இந்த பூமியில் மனிதனுடைய வாழ்க்கைப்பயணம் அகன்று விரிந்து பிரம்மாண்டமான நிலையை உடையது. வித்து தொடராக இந்த மனிதனாக வந்திருக்கும் காரணத்தினால் நாம் இடைமறித்து திசை மாற்றப்பட்டு இருக்கிறோம். நாம் வாழ வேண்டிய முறையும் நமக்காக இறைவன் வகுத்துக் கொடுத்த வாழ்க்கை முறையும் இது வல்ல. ஐம்பொறி, புலன்களை கடந்து சிந்தனை செய்து சிறப்பான நிலையை எய்துவதற்காகவே இம் மனித தோற்றம் இப்பூமியில் வந்திருக்கிறது.

🖼️ *இன்றைய தற்சோதனை*

🖼️ பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் இவைகளில் சிக்கியுள்ள வரை உங்களுடைய உண்மையான வாழ்க்கை பாதையை உங்களால் கண்டறிய முடியாது. இந்த மனிதஉருவம் என்பது நாம் பெற்ற வரம், கூடவே சாபமும் இருக்கிறது. அதுதான் "விலங்கின பதிவுகள்" சாபமாக அமைந்திருக்கும் இந்த விலங்கின பதிவுகளுக்கு நாம் பரிகாரம், பிராயச்சித்தம், (மேல் பதிவுகள்) செய்தே ஆக வேண்டும். சரியான முறையில் இவைகளை முறைப்படுத்திக் கொள்ள தற்சோதனை செய்து உங்களை நீங்களே தகவமைத்துக் கொள்ளுங்கள். அந்த சிறப்பும் திறமையும் உங்களிடம் உள்ளடக்கமாக இருக்கிறது.

🖼️ *இன்றைய பண்புப் பயிற்சி*

🖼️ என்ன நினைத்தாலும் மனிதனால் சாதிக்க முடியும். அதற்கான திறமையும், அறிவும் நமக்குள் உள்ளடக்கமாகவே இருக்கிறது. இதனை வளர்த்துக் கொள்ள அதற்கு தகுந்த பயிற்சி முறைதான் தேவை அந்த பயிற்சி முறையே மனவளக்கலையாக அமைந்திருக்கிறது. இந்த பயிற்சி முறையை நாள் தவறாமல் செய்யும் பண்பில் உயர்வு காணவேண்டும். இதன் வழியாக மட்டும் தான் நம்முடைய வாழ்க்கை பாதையை நம்மால் சரியாக தேர்ந்தெடுத்து வாழ முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள். இது ஒன்றே நமக்கு கிடைக்கக்கூடிய அற்புதமான வழித்தடம். வாழ்க வளமுடன்...

🖼️ *இன்றைய மூலிகை*

🖼️ *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு

🖼️ *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்ட

ு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.

🍁 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🍁 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🍁 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🍁 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments