நித்தியக்கடன் ஏப்ரல் 03 2022

⚙️🔮⚙️🔮⚙️🔮⚙️🔮⚙️🔮⚙️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஏப்ரல் 03*

⚙️🔮⚙️🔮⚙️🔮⚙️🔮⚙️🔮⚙️

🏮 *இன்றைய நித்தியகடன்*

🏮 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🏮 *இன்றைய சாதகம்*

🏮 ஞாயிற்றுகிழமை 
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 
மாலை:- இறைநிலை தவம்.
 
🏮 *இன்றைய நற்சிந்தனை*

🏮 இந்த பால்வெளி அண்டமானது கோடான கோடி ரகசியங்களையும், அனுபவங்களையும் தருவதற்காக மனிதர்களை உருவாக்கியிருக்கிறது. அதற்கு உகந்த செயல்பண்பு தான் ஆன்மீகம், மெய்ஞானம். பொதுவாக உலகியலில் எல்லோரும் வழிபடக்கூடிய உருவவழிபாடு அல்ல. ஆன்மீகமென்பது அதை தாண்டி உள்ள வழிபாடு மனதின் மூலமாக வழிபடக்கூடிய முறை, அறிவின் வழியாக வாழக்கூடிய நிலை இதுதான் ஆன்மீகம், மெய்ஞானம்.

🏮 *இன்றைய தற்சோதனை*

🏮 எவ்வளவோ அனுபவத்தை கொடுப்பதற்காக இந்த பிரபஞ்சம் தயாராக இருக்கிறது. நாம் வெறும் புலன் அனுபோகத்திலேயே இன்புற்று லயித்து அதிலேயே உழன்று கொண்டு இருப்பதால், உண்மையான நம்முடைய (status) நிலைபாட்டை இன்னுமும் வளர்த்துக் கொள்ளவே இல்லை. தியானமும், தற்சோதனையும் இந்த (status) நிலைப்பாட்டை நமக்குள் வளர்க்க கூடியது தான். ஆனால் இந்த அனுபவத்தை பெற முடியாத அளவுக்கு நம்முடைய பழைய பழக்கவழக்கங்கள், கற்பனைகள் நம்மை தடுக்கிறது. இந்த தடுப்பு சுவரை உடைத்து எறிந்துவிட்டு மெய்ஞான அண்டவெளியில் வாழ்வதற்கு வாருங்கள்.

🏮 *இன்றைய பண்புப் பயிற்சி*

🏮 புலன்கள் வழியாக வாழக்கூடிய அறிவும், சிந்தனையும், செயல்பாடும் சிற்றின்பமாகும். இந்த சிற்றின்பத்தை அளவோடும், முறையோடும் பயன்படுத்திக் கொள்ளலாம் தவறு ஏதும் கிடையாது. ஆனால் இதிலேயே நாம் நம்மை எல்லா வகையிலும் இழந்துவிடக்கூடாது. மெய்ஞானத்தில் உயர்வதற்காக வந்த இந்த மனித சரீரம் புலன் மயக்கத்தில் தங்கி விடாமல் கவனத்தோடு வாழ வேண்டும். கவனம் சிதையாமல் ஒவ்வொரு கணமும் வாழும்போது இந்த பண்பானது ஆன்மீகத்தில் நம்மை உயர்த்தும். வாழ்க வளமுடன்...

🏮 *இன்றைய மூலிகை*

🏮 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு

🏮 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.

🏮 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🏮 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🏮 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🏮 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments