நித்தியக்கடன் ஏப்ரல் 02 2022

💠🌿💠🌿💠🌿💠🌿💠🌿💠

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஏப்ரல் 02*

💠🌿💠🌿💠🌿💠🌿💠🌿💠

🌸 *இன்றைய நித்தியகடன்*

🌸 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🌸 *இன்றைய சாதகம்*

🌸 சனிக்கிழமை 
காலை:- சாந்தி தவம் 
மாலை:- நித்தியானந்ததவம்.
 
🌸 *இன்றைய நற்சிந்தனை*

🌸 எந்த ஒன்றையும் கடந்து போகாமல் அதிலிருந்து நாம் படிப்பினையை, அனுபவத்தை பெறவேண்டும். அனுபவம் என்பது நன்மையாகவோ, தீமையாகவோ அமையலாம். அதனை எதிர் கொள்ளும் போது தான் அது அறிவுக்கு புரியும். எந்த ஒன்றையும் இழப்பதற்கும், கடப்பதற்கும், எதிர்கொள்வதற்கும் தயங்காதீர்கள். எந்த ஒரு வாழ்க்கை சூழ்நிலையையும் நாம் நேருக்கு நேராக சந்திக்க வேண்டும். சில சூழ்நிலைகளை, சந்தர்ப்பங்களை நாம் மறைமுகமாகத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவை நம் உடலுக்கும், மனதுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியதாக இருக்கும் பட்சத்தில் அவைகளை மறைமுகமாகத்தான் எதிர்கொள்ள வேண்டும். (ராமாயணத்தில் வாலியை ராமன் மறைந்திருந்து தாக்கியது போல)

🌸 *இன்றைய தற்சோதனை*

🌸 வாழ்க்கையினுடைய சிக்கலையும், பிரச்சனையையும் சரியாக புரிந்துகொண்டு அதை எந்த முறையில் நாம் கையாள வேண்டும், என்ற விழிப்புநிலையையும், திறமையையும் திட்டமிட்டு வளர்த்துக்கொள்ள வேண்டும். திட்டமிட்டு செயலாற்றும் திறமையும், அறிவும் நாளுக்குநாள் நமக்குள் மேலோங்க வேண்டும். வாழ்க்கை சந்தர்ப்ப சூழ்நிலைகள் அனைத்தையும் தற்சோதனை செய்யுங்கள். இது ஒன்றே நம்முடைய திறமையை ஊக்குவிக்கும் பயிற்சி முறையாகும்.

🌸 *இன்றைய பண்புப் பயிற்சி*

🌸 எந்த ஒன்றும் நம் வாழ்க்கையில் நடந்தாலும் அது ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? என்று சிந்தித்து செயலாற்றும் பண்பில் உயர்வு பெற வேண்டும். இந்தப் பண்பு நம்முடைய நிலைபாட்டினை உறுதிப்படுத்தும். நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளும் அரணாக இந்த பண்பு அமைகிறது. வாழ்க வளமுடன்...

🌸 *இன்றைய மூலிகை*

🌸 எண்ணெய் கொப்பளித்தல் காலையில் எழுந்ததும் கை, கால், முகம் கழுவிவிட்டு குளிர்ந்த நீரை பயன்படுத்தி வாயை நன்றாக கொப்பளித்து தண்ணீரை துப்பி விடவும் *குறிப்பு*:- எண்ணையை கொப்பளிப்பதுக்கு முன்பாக பற்பசையை, அல்லது பல் பொடியைப் பயன்படுத்தி பல் துலக்க கூடாது. ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் வாய்ல் வைத்துக் கொண்டு 20 நிமிடம் வாயை கொப்பளிக்கவும் ஒரு சொட்டு விழுங்கி விடாமல் கவனமாக இருக்கவும். 20 நிமிடம் கழித்து முழுமையாக துப்பிவிட வேண்டும்‌. இதன்பின் வழக்கம்போல் பற்பசையையோ பல் பொடியையோ பயன்படுத்தி பல்துலக்கி கொள்ளலாம் கூடுமானவரை உடலுக்கு தீங்கான ரசாயன பற்பசையைகளை தவிர்க்கவும்.

🌸 பலன்கள் வயிற்றுப்புண், அஜீரண கோளாறு, பெண்களுக்கான மாதவிடாய் கோளாறு, மலச்சிக்கல், மற்றும் ஜீரண உறுப்புகளில் உள்ள நச்சுத்தன்மை அனைத்தையும் முழுமையாக வெளியேற்றி விடும்.

🌸 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌸 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌸 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments