நித்தியக்கடன் மார்ச் 31 2022

⛳🚥⛳🚥⛳🚥⛳🚥⛳🚥⛳

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மார்ச் 31*

⛳🚥⛳🚥⛳🚥⛳🚥⛳🚥⛳

🌀 *இன்றைய நித்தியகடன்*

🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🌀 *இன்றைய சாதகம்*

🌀 வியாழக்கிழமை இன்று அமாவாசை காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம்.
 
🌀 *இன்றைய நற்சிந்தனை*

🌀 ஒருவருடைய பலகீனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது. திறமையோ, புத்திசாலித்தனமோ கிடையாது. இது ஒரு வகையான அறிவுக் குறைபாடு. தானும் அறிவில் உயர்ந்து, மற்றவர்களையும் அறிவில் உயர்த்தி எல்லா வகையான இயற்கை வளங்களை பாதுகாத்தலும், அதனை சீர் குலையாமல் பயன்படுத்தி பயன்காண்பது மட்டுமே மனிதனுடைய வாழ்வியல் முறையும் அமைப்பாகும். இந்த முறையிலும் அமைப்பிலும் நாம் வாழ்கிறோமா என்பதை சிந்தித்து ஆய்வு செய்து நம்மை ஒழுங்கமைத்து மேம்படுத்திக் கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பும் கடமையும் ஆகும்.

🌀 *இன்றைய தற்சோதனை*

🌀 ஒழுங்கமைப்பு என்பது தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைத்தல். தான் மட்டும் வாழ்ந்தால் போதும். என்று எண்ணுவது இயற்கைக்கும், இறைநீதிக்கும் முரண்பாடான ஒன்றாகும். நமக்கு என்ன தேவையோ அது இந்த சமுதாயத்தில் இருந்தே பெறுகின்றோம். நம்முடைய உழைப்பும் இந்த சமுதாயத்தோடு பகிரப்படுகிறது. யாரும் தனித்திருந்து வாழ்ந்து மறைய முடியாது. அனைத்திற்கும், அனைவருக்கும் சமுதாயத்தினுடைய உதவியும். ஒத்துழைப்பும் தேவை. அடிப்படை தேவைகள் ஆகிய உணவு உழைப்பு இருப்பிடம் கழிவுப் பொருள்களின் உண்டு வேகத்திற்கு ஏற்ப முறையான சூழ்நிலை இவை அனைத்தும் இந்த சமுதாயத்தில் இருந்தே நாம் பெறுகிறோம் மீண்டும் இந்த சமுதாயத்திற்கு நாம் நன்மையே செய்து வாழ வேண்டும். தற்சோதனை செய்து, சிந்தித்து வாழ்வோம்.

🌀 *இன்றைய பண்புப் பயிற்சி*

🌀 நமக்குள்ளிருக்கும் ஈடுஇணையில்லாத செல்வ வளம் "சிந்தித்து செயலாற்றும் பண்பு" இறை நீதியை அடிப்படையாகக் கொண்டு மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களோ. அதையெல்லாம் முதலில் நீங்கள் அவர்களுக்கு செய்யுங்கள், சுயநலமாக சிந்தித்தாலும் இறைநீதி இல்லாத பொதுநலம் என்ற போர்வையில் வாழ்வதும் நமக்குள்ளாக நோய் தன்மைகளை தான் அதிகரிக்கும் ஆகவே இரண்டொழுக்க பண்பாட்டை கடைபிடிப்போம், இந்த சிறப்பான பண்பு உங்களை நாளுக்கு நாள் அறிவிலும், வாழ்க்கை வளங்களிலும் உயர்த்தும். வாழ்க வளமுடன்...

🌀 *இன்றைய மூலிகை*

🌀 *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.

🌀 அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும். 

🌀 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌀 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌀 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌀 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments