நித்தியக்கடன் மார்ச் 29 2022

🌌📊🌌📊🌌📊🌌📊🌌📊🌌

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மார்ச் 29*

🌌📊🌌📊🌌📊🌌📊🌌📊🌌

🏜️ *இன்றைய நித்தியகடன்*

🏜️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🏜️ *இன்றைய சாதகம்*

🏜️ செவ்வாய்கிழமை 
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
 
🏜️ *இன்றைய நற்சிந்தனை*

🏜️ அதிகப்படியான குளிர், காற்று, மழை, வெயில் இவைகளை நம்மால் தாங்க முடிவதில்லை. நம்முடைய இயல்பான சூழ்நிலைகளை இவைகள் மாற்றிவிடுகிறது. இந்த பாதிப்பு பொருந்தா உணர்வுகளை மாற்றங்களை உருவாக்கிவிடுகிறது. இவைகளெல்லாம் ஏன் நடைபெறுகிறது? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். எந்த ஒரு காரணமும் இல்லாமல், எந்த ஒரு அணுவுக்குள்ளும், எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது. ஆகவே ஏதோ ஒரு காரணம் நிச்சயமாக இருக்கும். இந்த காரணத்தை புரிந்து கொள்ள விஞ்ஞான அறிவு மட்டும் போதாது. மெய்ஞான அறிவும், அனுபவமும் வேண்டும். 

🏜️ *இன்றைய தற்சோதனை*

🏜️ காரண காரியங்களை சிந்தித்துப் பார்த்து அதற்கு தகுந்தார் போல, நம்முடைய செயல் பழக்க வழக்கங்களை சீர் அமைப்பதற்காக, நாம் எப்போது துவங்கினோமோ அங்கே அந்த வினாடி பண்பாடு, கலாச்சாரம் தோன்றியது. இப்போது அந்தப் பண்பாடும், கலாச்சாரமும் என்ன நிலைமையில் இருக்கிறது. நம்முடைய மனதிற்கு முன்னும் பின்னும் ஒரே இரைச்சல், அமைதி இன்மை இதை வைத்துக் கொண்டு அழகான அமைதியான இறைநிலையின் தன் மாற்று சரித்திரத்தை உணர்ந்து கொள்ள முடியாது. தற்சோதனை செய்யுங்கள் உங்களை நீங்களே தகவமைத்துக் கொள்ளுங்கள்.

🏜️ *இன்றைய பண்புப் பயிற்சி*

🏜️தனக்கும் பிறருக்கும் தனக்கும் சமுதாயத்திற்கும் தனக்கும் இயற்கைக்கும் நல்ல விளைவுகளை உருவாக்கும் முறையில் வாழ்வதே மனிதனுடைய வாழ்க்கை முறையாகும்.ஆனால் மனிதர்கள் இப்போது எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தனக்கு மட்டும் நன்மை எதுவெல்லாம் தருகிறதோ, அதை எல்லாம் சமுதாயத்தில் பரவவிட்டு கொண்டிருக்கின்றோம். இது தவறு என்று தெரிந்தும் அணு அளவு கூட மனதில் அச்சமில்லாமல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வது போல, மனசாட்சியை அறுவை சிகிச்சை செய்து வெளியே எரிந்துவிட்டு ஆபத்தான ஒரு வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதிலிருந்து நாம் நம்மை விடுவித்துக் கொண்டு உண்மையான வாழ்க்கையை வாழ தயாராக வேண்டும். வாழ்க வளமுடன்...

🏜️ *இன்றைய மூலிகை*

🏜️ *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

🏜️ இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும். 

🏜️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🏜️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🏜️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🏜️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments