நித்தியக்கடன் மார்ச் 27 2022

🔘🌿🔘🌿🔘🌿🔘🌿🔘🌿🔘

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மார்ச் 27*

🔘🌿🔘🌿🔘🌿🔘🌿🔘🌿🔘

🔮 *இன்றைய நித்தியகடன்*

🔮 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🔮 *இன்றைய சாதகம்*

🔮 ஞாயிற்றுகிழமை 
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 
மாலை:- இறைநிலை தவம்.
 
🔮 *இன்றைய நற்சிந்தனை*

🔮 உணர்ச்சி நிலைக்கும், உணர்வு நிலைக்கும் வேறுபாடு இருக்கிறது. எல்லாவற்றையும் நானே செய்து அனுபவித்து புரிந்துகொள்ள வேண்டும். என்று எண்ணி வாழ்ந்தால் அது உணர்ச்சி வயப்பட்டநிலை. மற்றவர்களுடைய வாழ்க்கையிலிருந்தும், அனுபவத்திலிருந்தும் நீங்கள் பாடம் கற்றுக் கொண்டால் அது உணர்வு நிலை. விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, தியாகம் இவைகள் உங்களுடைய வாழ்க்கையாக அமைந்தால் மட்டுமே மற்றவர்களுடைய அனுபவத்தை உங்களுடைய அனுபவமாக உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

🔮 *இன்றைய தற்சோதனை*

🔮 ஒரு பாறையிலிருந்து தேவையில்லாத பகுதியெல்லாம் நீக்கப்படும்போது. அது முழுமையான சிற்பமாக வடிவம் பெறுகிறது. அதுபோன்றே உங்களிடம் இருக்கக்கூடிய தேவையில்லாதவற்றை எல்லாம் நீக்கிக் கொள்ளுங்கள். பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் இவைகள் மனிதனுடைய குணமோ, பண்போ அல்ல.

🔮 *இன்றைய பண்புப் பயிற்சி*

🔮 நிறைமனம் சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, சமநேர்உணர்வு, மன்னிப்பு இவ்வகையான குணமும், பண்புமே நீங்கள் வாழவேண்டிய பண்பாகும், குணமாகும். அவைகளுக்கு பக்கபலமாக மனவளக்கலை பயிற்சியை நாள் தவறாமல் செய்து உங்கள் வாழ்வில் எல்லா வெற்றியும், மகிழ்ச்சியும், மன நிறைவும் பெறுவீர்களாக. "வாழ்க வளமுடன்" பயிற்சியை நாள்தோறும் செய்து வாழும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...

🔮 *இன்றைய மூலிகை*

🔮 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு

🔮 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.

🔮 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🔮 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🔮 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🔮 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments