நித்தியக்கடன் மார்ச் 26 2022

🎴🎲🎴🎲🎴🎲🎴🎲🎴🎲🎴

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மார்ச் 26*

🎴🎲🎴🎲🎴🎲🎴🎲🎴🎲🎴

🗾 *இன்றைய நித்தியகடன்*

🗾 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🗾 *இன்றைய சாதகம்*

🗾 சனிக்கிழமை 
காலை:- சாந்தி தவம் 
மாலை:- நித்தியானந்ததவம்.
 
🗾 *இன்றைய நற்சிந்தனை*

🗾 மனிதர்கள் வாழ்க்கையில் வருகின்ற அனைத்து சிக்கல்களுக்கும் ஆசான் வேதாத்திரியத்தை வடிவமைத்திருக்கிறார்கள். பயிற்சியின் மதிப்பை உணருவோம் குருவை (வேதாத்திரி மகரிஷியை) பயிற்சியாய் எண்ணி மதிப்போம். நன்றென அறிந்ததை, நன்றென உயர்ந்ததை இன்றே இன்றே செய்வோம். காலம் ஒரு போதும் நமக்காக காத்திருக்கப் போவதில்லை. இன்று இப்போது செய்ய வேண்டிய காரியத்தைப் நாளை என்று தள்ளிப் போடும் போது விளைவும் மாறுபடும் விளைவறிந்து விழிப்பு நிலையில் வாழ்வோம்.

🗾 இந்த உலகம் முழுவதும் வாழ்கின்ற மனிதர்களின் வாழ்வின் நோக்கம் ஒன்றாகவே இருந்தாலும் தொடர்பு கொள்ளும் பொருள் அல்லது நபர் இடம் காலம் திறமை நோக்கம் இவற்றிற்கு ஏற்றார்போல விளைவு நிச்சயமாக ஒரே மாதிரி அமைய முடியவே முடியாது. *ஏது நன்று* தனக்கும், பிறருக்கும், தற்காலத்திலும், பிற்காலத்திலும், உடலுக்கும், உயிருக்கும் தனது எண்ணத்தால், சொல்லால், செயலால் துன்பவிளைவு ஏற்படாது அமைத்துக்கொள்ளும் அனைத்தும் நன்றே. இந்தப் பிரபஞ்சத்தில் தான் உட்பட அனைத்தையும் உணர்ந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு மனித இனத்திற்கு மட்டுமே அமைந்த சிறப்பு வாய்ப்பாகும், இது நமக்கு மட்டும் சாத்தியம்.

🗾 உடலுக்கும் மனதிற்கும், உயிருக்கும் மனதிற்கும், தனக்கும் சமுதாயத்திற்கும், தனக்கும் இயற்கைக்கும் இடையே உள்ளநட்பை, இணக்கமாக, இனிமையாக சிறப்பாக உயர்த்திக் கொள்ளும் செயல் திறமையை மனிதர்கள் இயல்பாகவே உள்ளடக்கமாக பெற்றுள்ளார்கள் அந்த திறமைக்கு பெயர்தான். *"உற்றுணரும் பண்பு"* இந்த உற்றுணரும் பண்பின் மூலம் பிரபஞ்சன் தன்மாற்றத்தையும் உயிரின தன்மாற்றத்தையும் நாம் தெளிவாக உணர்ந்து கொண்டு அதற்கு தக்க முறையில் நம்முடைய செயல் பண்புகளை சீர் திருத்தம் செய்து கொள்வோம் இத்தகைய சிறப்புமிக்க உற்றுணரும் பண்பில் நாம் உயர்ந்து நாமும் நம் குடும்பமும் நலமும் வளமும் பெறுவோம். வாழ்க வளமுடன்...

🗾 *இன்றைய மூலிகை*

🗾 எண்ணெய் கொப்பளித்தல் காலையில் எழுந்ததும் கை, கால், முகம் கழுவிவிட்டு குளிர்ந்த நீரை பயன்படுத்தி வாயை நன்றாக கொப்பளித்து தண்ணீரை துப்பி விடவும் *குறிப்பு*:- எண்ணையை கொப்பளிப்பதுக்கு முன்பாக பற்பசையை, அல்லது பல் பொடியைப் பயன்படுத்தி பல் துலக்க கூடாது. ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் வாய்ல் வைத்துக் கொண்டு 20 நிமிடம் வாயை கொப்பளிக்கவும் ஒரு சொட்டு விழுங்கி விடாமல் கவனமாக இருக்கவும். 20 நிமிடம் கழித்து முழுமையாக துப்பிவிட வேண்டும்‌. இதன்பின் வழக்கம்போல் பற்பசையையோ பல் பொடியையோ பயன்படுத்தி பல்துலக்கி கொள்ளலாம் கூடுமானவரை உடலுக்கு தீங்கான ரசாயன பற்பசையைகளை தவிர்க்கவும்.

🗾 பலன்கள் வயிற்றுப்புண், அஜீரண கோளாறு, பெண்களுக்கான மாதவிடாய் கோளாறு, மலச்சிக்கல், மற்றும் ஜீரண உறுப்புகளில் உள்ள நச்சுத்தன்மை அனைத்தையும் முழுமையாக வெளியேற்றி விடும்.

🗾 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🗾 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🗾 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments