🎱💠🎱💠🎱💠🎱💠🎱💠🎱
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மார்ச் 25*
🎱💠🎱💠🎱💠🎱💠🎱💠🎱
🎭 *இன்றைய நித்தியகடன்*
🎭 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎭 *இன்றைய சாதகம்*
🎭 வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
🎭 *இன்றைய நற்சிந்தனை*
🎭 கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் கணித வகைகள் நிறைய உண்டு. இந்த கணித வகைகளுக்கும் நம்முடைய வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பும் உண்டு. எந்த எண்ணத்தை கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்துப் பார்த்தால் விளைவுகள் நன்மைகளைத் தரவேண்டும். இறைவனுக்கும் நமக்குமான நட்பை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். பல்வேறு வகையில் சிந்தித்து கணித்துக் கொண்டு கணித வாழ்க்கை வாழ்வோம்.
🎭 *இன்றைய தற்சோதனை*
🎭 நம்முடைய தேவைகளை எல்லா காலத்திலும் ஒரே மாதிரியாக வைத்துக் கொண்டு வாழ முடியாது. சூழ்நிலை மாற்றத்துக்கு ஏற்ப நம்முடைய கொள்கை கொஞ்சம் விட்டு கொடுத்து மாற்றிக் கொள்ளத் தான் வேண்டும். யாருக்கும் பாதகம் இல்லாமல் லேசாக கூட்டி குறைத்துக் கொள்ளலாம் ஆனால் நல்ல நிலைபாட்டை விட்டு நாம் விலகி விடக்கூடாது. எந்த ஒரு சூழ்நிலையிலும் நன்மையும், தீமையும், கலந்தே தான் ஒவ்வொருவருடைய வாழ்க்கை சூழ்நிலையும் இருக்கும். இவற்றை நன்றாக ஆய்வு செய்து நல்ல சூழ்நிலைகளை தேர்வு செய்துகொண்டு நிறைவாக வாழ்வதற்கு முயற்சி செய்வோம்.
🎭 *இன்றைய பண்புப் பயிற்சி*
🎭 நம்முடைய வாழ்க்கை சூழ்நிலையில் நாம் மட்டும் இருக்கப்போவதில்லை அப்படி அமையப் போவதுமில்லை அதில் பலரும் இருப்பார்கள். எல்லோரும் இணைந்ததுதான் இந்த மனித வாழ்க்கை. இந்த வாழ்க்கையை முழுமையான வாழ்க்கையாக வாழ்வதற்கு நாம் சில பண்புகளை உளமாற ஏற்று அவைகளுக்கு நமக்குள் ஆதரவு கொடுக்கத் தான் வேண்டும். அவைகளை வெறுத்து ஒதுக்கி விடக்கூடாது அந்த பண்பு தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ நம் எண்ணம், சொல், செயல் இவை இவ்வழியாக தீய விளைவு ஏற்படாமல் வாழ்வதே ஆகும். வாழ்க வளமுடன்...
🎭 *இன்றைய மூலிகை*
🎭 *நீராவி பிடித்தல்* குடிநீர் 1,1/2 லிட்டர் நன்றாக கொதிக்கவைத்து ஒரு போர்வையை போர்த்தி வாய் வழியாக இழுத்து மூக்கு வழியாகவும். மூக்கு வழியாக இழுத்து வாய் வழியாகவும் மாற்றி மாற்றி நீராவியை இழுத்து விடவும். காலை, மாலை இரண்டு வேளையும் பயன்படுத்தலாம். குறிப்பு:- மினரல் வாட்டர் தவிர்க்கவும்.
🎭 நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி என அனைத்தும் குணமாகும்,
🎭 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🎭 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🎭 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🎭 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment