🔰🕸️🔰🕸️🔰🕸️🔰🕸️🔰🕸️🔰
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மார்ச் 24*
🔰🕸️🔰🕸️🔰🕸️🔰🕸️🔰🕸️🔰
🌷 *இன்றைய நித்தியகடன்*
🌷 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌷 *இன்றைய சாதகம்*
🌷 வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🌷 *இன்றைய நற்சிந்தனை*
🌷 "உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய் எண்ணுவதும் செய்வதும் நித்தியக்கடன்" மனிதனுடைய வாழ்க்கை இணைதலும் பிரிதலுமாகும். இணைய வேண்டிய பொருளோடு இணைந்து, அதற்கும் நமக்குமான நிலைபாடுகளை ஒழுங்கமைத்து கொள்ள வேண்டும். பிரிய வேண்டிய பொருள்களை பிரிந்து, அதற்கும் நமக்குமான இடைவெளியை உருவாக்கிக் கொண்டு, பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது நமக்கும் நல்லது நம்மை சார்ந்தவர்களுக்கும் நல்லது.
🌷 *இன்றைய தற்சோதனை*
🌷 உயிரோடும், காந்தத்தோடும், பிரபஞ்ச வெளியில் வானுலாவும் கோள்களோடும் நாம் இணைந்து வாழவேண்டும். அதற்கும் நமக்குமான அறிவாட்சித்தரம், ஆளுமைத்திறன், இவைகள் அனைத்தையும் உயர்த்திக் கொள்ள வேண்டும். விலங்கின பதிவுகள் பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் பஞ்சமகாபாதகங்களாகிய பொய், சூது, களவு, கொலை, கற்பழிவு இவற்றிலிருந்து நம்மை விலக்கிக்கொள்ள வேண்டும்.
🌷 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌷 படிப்படியாகத்தான் இந்த செயல்களில் நாம் முழு வெற்றியை காண முடியும். அதுவரையில் நாம் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். முயற்சியை ஒருபோதும் ஒருநாளும் கை விட்டு விடக்கூடாது. மனவளக்கலை பயிற்சியின் துணைகொண்டு நமக்குள் நாம் பயணித்து, இறுதியாக இறைநிலையோடு ஒன்றிக் கலந்து, அதுவாக வாழும் ஞானமான வாழ்க்கைக்கு உயர்வோம். வாழ்க வளமுடன்...
🌷 *இன்றைய மூலிகை*
🌷 *இஞ்சி+தேன்* தேவையான பொருட்கள், இஞ்சி 4 கிராம்
தண்ணீர் 90ml
தேன் ஒரு டீஸ்பூன்
🌷 செய்முறை:- இஞ்சியை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து அதில் உள்ள சுண்ணாம்பு படிந்த பின் தெளிந்த சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும்.
🌷 நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, அஜிரணம் என அனைத்தும் குணமாகும், *குறிப்பு:- இஞ்சி சாறும், மூன்று மாத குழந்தைக்கு மூன்று சொட்டு போதுமானது, ஒரு வயது குழந்தைகளுக்கு 2.5ml போதுமானது*.
🌷 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌷 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌷 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌷 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment