🕳️🍁🕳️🍁🕳️🍁🕳️🍁🕳️🍁🕳️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மார்ச் 23*
🕳️🍁🕳️🍁🕳️🍁🕳️🍁🕳️🍁🕳️
🍀 *இன்றைய நித்தியகடன்*
🍀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🍀 *இன்றைய சாதகம்*
🍀 புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🍀 *இன்றைய நற்சிந்தனை*
🍀 உங்களுடைய பழக்கவழக்கங்களை ஒரு பக்கம், ஓரமாக நகர்த்தி வையுங்கள். உங்களுக்குள் இருக்கக்கூடிய உண்மையினுடைய உயர்ந்த வலிமையை, சிறப்பை உங்களுடைய போலியான பழக்கவழக்கங்கள் இடைமறித்து, தனக்குள்ளாக புதைத்து கொள்கிறது மறைத்து விடுகிறது. நீங்கள் உண்மையாக இருந்து செயல்பட்டு அதன் மூலமாக உங்களுக்குள் பெருகிய தன்மை எதுவோ, அதுதான் இறைநிலையை உணர்வதற்கான ஞான பீடமாக அமைகிறது. ஆகவே உங்களுடைய பழக்கவழக்கங்களில் இருக்கக்கூடிய போலிகளை இனம் கண்டு அவைகளை களைஎடுக்க வேண்டும்.
🍀 *இன்றைய தற்சோதனை*
🍀 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். திருக்குறள் எதிலெல்லாம் இருந்து உங்களை நீங்கள் விடுவித்துக் கொள்கிறீர்களோ, அதில் எல்லாம் இருந்து உங்களுக்கு துன்பமில்லை மாறாக அதன் விளைவாக நீங்கள், உயர்ந்த அனுபவங்களை பெறுவீர்கள். அப்போதுதான் உண்மை நிலை தன்மையின் சிறந்த இயக்க அமைப்புகள் உங்களின் உயிரில் அமையும். இந்த அமைப்புதான் தெளிவையும் உடல் ஆரோக்கியத்தையும் வழங்குகிறது. மனமும் தன்னுடைய இயல்பான நிலையை உணர்ந்துகொண்டு தெளிவு பெற்று தன் மூலத்தோடு இணையும் முயற்சியில் செயல்படத் துவங்கும்
🍀 *இன்றைய பண்புப் பயிற்சி*
🍀 மனதிற்கு பல்வேறு முகங்கள் உண்டு இவை அவ்வாறு இருந்து இயங்குவதற்கு இயற்கையில் சரியான காரணமும் இருக்கிறது இருந்தபோதும் இந்த மனித பிறவி யானது பன்முகத் தன்மை வாய்ந்த மனதை ஒருமுகப்படுத்தி அதன் வழியாக இறைநிலையை உணர்வதே ஆகும். நம் மனதில் நாம் விரும்பியதும் இருக்கிறது, விரும்பாததும் இருக்கிறது. இந்த மனதினுடைய பல்வேறுபட்ட முகங்களில் நல்லவைகளை தேர்வு செய்து கொண்டு, எப்போதும் உயர்ந்த சிந்தனையோடிருந்து வாழும் செயல் பண்பில் மனம் உயர்வு பெறும் போது தான். தான் துன்ப படாமலும் பிறரை துன்பப்படுத்தாமலும் வாழும் முறைக்கு தன்னை உயர்த்திக் கொள்ளும். இந்த பண்போடு வாழ்வோம் நாளைய எதிர்கால சமுதாயம் வாழ வழிவகை செய்வோம். வாழ்க வளமுடன்...
🍀 *இன்றைய மூலிகை*
🍀 *கருஞ்சீரகம்* தேவேயான பொருட்கள், கருஞ்சீரகம் – 50gm,
வெந்தயம் – 250gm,
ஓமம் – 100gm
🍀 மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனித்தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.
🍀 தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது, இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
🍀 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது, மலச்சிக்கல் நீங்குகிறது, பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது, ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்க படுகிறது.
🍀 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🍀 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🍀 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🍀 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment