நித்தியக்கடன் மார்ச் 22 2022

🌍🚥🌍🚥🌍🚥🌍🚥🌍🚥🌍

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மார்ச் 22*

🌍🚥🌍🚥🌍🚥🌍🚥🌍🚥🌍

🌀 *இன்றைய நித்தியகடன்*

🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🌀 *இன்றைய சாதகம்*

🌀 செவ்வாய்கிழமை 
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
 
🌀 *இன்றைய நற்சிந்தனை*

🌀 வான் மண்டலத்தை பற்றிய உண்மைகளை சிந்தனை செய்து பார்ப்பதற்கும் அனுபவத்தோடு ஞானிகளும், மகான்களும், மகரிஷிகளும் சொல்லியிருக்கிற வாக்கியங்களை நம்புவதற்கும் நம்மால் ஏன் முடிவதில்லை. ஏன் நம் மனம் அதை ஏற்க மறுக்கிறது. இந்த உண்மைகளை ஏற்க முடியாத அளவிற்கு அதற்கும் நமக்கும் இடையே ஏதோ ஒன்று இருந்து தடுத்துக் கொண்டே இருக்கிறது. அந்த ஒன்று அகற்றப் படாத வரை, அதனுடைய தன்மையை மாற்றி அமைக்காத வரை அண்டவெளில் உள்ள உண்மைகளை நம்மால் நம்பவோ, அனுபவமாக ஏற்படுத்திக் கொள்ளவோ இயலாது.

🌀 *இன்றைய தற்சோதனை*

🌀 அப்படி இரண்டுக்குமிடையே இருந்து தடுப்பது எது. உயிரினுடைய படர்க்கை நிலையே மனம். உயிரிலிருந்து வெளியேறும் ஆற்றல் புலன்கள் வழியாக விரிவடைந்து மனமாக செயல்படுகிறது. இந்த உயிர் மீது படிந்து இருக்கக்கூடிய பாவவினை பதிவுகள்தான் தடுக்கிறது. உயிர் மீது உள்ள இந்த படிமம் பாவ வினை பதிவுகள் பூரணமான உண்மையை அனுபவமாக்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மயக்க உணர்சிகளை துண்டுகிறது.

🌀 *இன்றைய பண்புப் பயிற்சி*

🌀 நமக்கு பொருந்தாத பதிவுகளை, கற்பனையை நம்மிடையே அதிகரிக்கும் மனதிற்கு இது மயக்க நிலையை கொடுக்கும். அறிவோடு இணைந்து இயங்க முடியாத அளவிற்கு இந்த மயக்க உணர்ச்சி நிலை, புலன் வழியே நம்மை இழுத்துச்செல்லும். இவையெல்லாம் நாம் புரிந்து கொண்டால்தான் அவற்றிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள முடியும். விடுபேறு என்பது எதனிடமோ, எங்கேயோ இருந்து விடுதலை நிலை அடைவது அல்ல. நம்மிடமுள்ள பாவ வினை பதிவுகளிடமிருந்து விடுதலை பெறுவதே முக்தி அறிவின் முழுமைப் பேறு. வாழ்க வளமுடன்...

🌀 *இன்றைய மூலிகை*

🌀 *வேப்பிலை* தேவையான பொருட்கள், வேப்பிலை 5, சின்ன வெங்காயம் 1, மிளகு 3, சீரகம் 10, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள். (ஒரு நபருக்கான அளவு) இவைகளை நன்றாக அரைத்து காலையில் வெறும் வயிற்றில் 20 நிமிடம் வாயில் இருக்கும்படி மென்று உமிழ்நீரை சிறிதுசிறிதாக விழுங்கவும். 

🌀 நன்மைகள்:- நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும், உடலில் உள்ள செல்கள் அனைத்தும் பலம் பெறுகிறது, ரத்தம் தூய்மையாகிறது, படிப்படியாக உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அதிகரிக்கிறது.

🌀 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌀 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌀 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌀 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments