நித்தியக்கடன் மார்ச் 21 2022

🌸⛳🌸⛳🌸⛳🌸⛳🌸⛳🌸

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மார்ச் 21*

🌸⛳🌸⛳🌸⛳🌸⛳🌸⛳🌸

💯 *இன்றைய நித்தியகடன்*

💯 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

💯 *இன்றைய சாதகம்*

💯 திங்கட்கிழமை 
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.
 
💯 *இன்றைய நற்சிந்தனை*

💯 எந்த ஒரு வாழ்க்கை சூழ்நிலையையும் அது என்ன என்று புரியாமல், தெரியாமல் அதனை கடந்து போகாதீர்கள் இது ஏன்? எதனால்? எப்படி? என்று எந்த ஒரு சூழ்நிலையையும் சரியாக சிந்தித்து புரிந்து கொண்டபின் முடிவெடுத்து நகருங்கள், சூழ்நிலைகளிலிருந்து தப்பித்து செல்வது அறிவுடைமையாகாது

💯 *இன்றைய தற்சோதனை*

💯 சிந்தித்து முடிவு எடுக்காத சூழ்நிலைகள் மீண்டும், மீண்டும் நம்மை தன்வயப்படுத்த முயற்சி செய்யும். ஆகவே அனைத்து சூழ்நிலைகளையும் தற்சோதனை செய்யுங்கள். அதனுடைய ஆழம், அகலம், நீளம் இவைகளை சிந்தித்து புரிந்து கொண்டு வாழ்க்கையை தற்சோதனையோடு இனிமையாக வாழுங்கள்.

💯 *இன்றைய பண்புப் பயிற்சி*

💯 அறிவியல் என்ற சொல் அறிவாக இருக்கும் இறைவனை உணர்ந்து கொள்ளுதல். அதனுடைய தன்மைகளை நம் அனுபவமாக்கிக் கொள்ளுதலே ஆகும். சிந்தனை செய்ய, செய்யதான் அறிவியலும், இறைஇயலும், அதன் தன்மைகளும் அனுபவமாகும். ஆழ்மனதிற்கு அன்போடு வாருங்கள் உங்களுக்கான அறிவியல் தன்மை இங்கே இருப்பாக இருக்கிறது. அறிவியல் பண்பில் நாளுக்கு நாள் சிறந்து உயர்வோம். வாழ்க வளமுடன்...

💯 *இன்றைய மூலிகை*

💯 *சின்ன வெங்காயம்+தேன்*
தேவையான பொருட்கள், சின்ன வெங்காயம் 10 கிராம் 
தண்ணீர் 90ml
தேன் ஒரு டீஸ்பூன்

💯 செய்முறை:- சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து சாறு எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும். 

💯 நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, அஜிரணம் என அனைத்தும் குணமாகும், *குறிப்பு:- சின்ன வெங்காயம் சாறும், மூன்று மாத குழந்தைக்கு மூன்று சொட்டு போதுமானது, ஒரு வயது குழந்தைகளுக்கு 2.5ml போதுமானது*.

💯 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

💯 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

💯 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

💯 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments