நித்தியக்கடன் மார்ச் 20 2022

🔘🕳️🔘🕳️🔘🕳️🔘🕳️🔘🕳️🔘

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மார்ச் 20*

🔘🕳️🔘🕳️🔘🕳️🔘🕳️🔘🕳️🔘

⛳ *இன்றைய நித்தியகடன்*

⛳ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

⛳ *இன்றைய சாதகம்*

⛳ ஞாயிற்றுகிழமை 
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 
மாலை:- இறைநிலை தவம்.
 
⛳ *இன்றைய நற்சிந்தனை*

⛳ உயிர்துகள்கள் மீது இருக்கும் விலங்கின பதிவினை போக்கிக் கொள்வதற்காக நாம் முயற்சியும், பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும். இந்த உயிர்துகள்கள் மீது இருக்கும் விலங்கின பதிவுகளை அகற்றப்படும் போது தான், உயிர்துகள்கள் சுதந்திரமாக இந்த பிரபஞ்சம் முழுவதிலுமுள்ள எல்லா நிலைகளிலும் இணைந்து இயங்கும் வாய்ப்பினை பெறுகிறது. உயிர்துகள்கள் இவ்வாறு இயங்கும் போது தான் பிரபஞ்ச உண்மைகளை நம் மூளை செல்கள் வலியாக உணர, அனுபவமாக்கிக் கொள்ளமுடியும். "*இதுவே வீடுபேறு என்று பேசப்படுகிறது*"

⛳ *இன்றைய தற்சோதனை*

⛳ இந்த விலங்கின பதிவுகளை போக்கிக் கொள்வதற்காக நாம் முயற்சி மேற் கொள்ளாமல், புலன்கள் வழியே மயங்கிய நிலையில் செயல்பட்டு வாழும் போது, அதில் நமக்கு ஒரு திருப்தியும், மன நிறைவும் ஏற்படுவது இல்லை. இந்த உண்மையை உணர்ந்துகொண்டு இந்த பிறவிக்கான செயலை விருப்பத்தோடு ஏற்று பயிற்சியோடு முயற்சி செய்யுங்கள். மன நோய்களும், உடல் நோய்களும் போக்கும். தற்சோதனை இதற்கான தளத்தை உருவாக்கி தரும்.

⛳ *இன்றைய பண்புப் பயிற்சி*

⛳ எந்த ஒரு வார்த்தையையும், கருத்தையும் அதன் உள்ளாழ்ந்த பொருளை, அர்த்தத்தை உள்ளதை உள்ளவாறு புரிந்து கொள்ளுங்கள். அதன் பொருளை, அர்த்தத்தை மாற்றி புரிந்து கொண்டு விடாதிர்கள். அதன் பின் நாம் மனவருத்தத்தையும், துன்பத்தையும் சந்திக்க நேரிடும். உள்ளதை உள்ளவாறு உணர்ந்து கொள்ளும் பண்பில் உயர்வு காண்போம். இந்நிலையிலும் பண்பிலும் வாழும்போதுதான் உயிர் உயர்ந்த நிலையில் இயங்கும், அதற்க்கென வாய்ப்பும் அமையும். வாழ்க வளமுடன்...

⛳ *இன்றைய மூலிகை*

⛳ *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு

⛳ *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.

⛳ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

⛳ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

⛳ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

⛳ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments