நித்தியக்கடன் மார்ச் 18 2022

💦🚥💦🚥💦🚥💦🚥💦🚥💦

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மார்ச் 18*

💦🚥💦🚥💦🚥💦🚥💦🚥💦

🎱 *இன்றைய நித்தியகடன்*

🎱 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🎱 *இன்றைய சாதகம்*

🎱 வெள்ளிகிழமை 
காலை, மாலை இரண்டு 
வேளையும் சாந்தி தவம்.
 
🎱 *இன்றைய நற்சிந்தனை*

🎱 நம்முடைய கர்மவினை நம் உள்ளும் புறமும் இருந்து நம்மை வழிநடத்துகிறது. இதனை தாண்டி இறைநிலை நம்மை மேலான நிலைக்கு உயர்த்துவதற்கு, சதாசர்வகாலமும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறது. நம்முடைய பிழைகளில் இருந்து நம்மை சிந்தனை, சிக்கனம், சீர்திருத்தம் எனும் முறையில் இயற்கை எனும் பேராற்றல் இறைநிலை நம்மை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறது. வித்துத் தொடராக நாம் இந்த மனித உருவத்திற்கு வந்த காரணத்தால், புலன் மயக்கத்தில் புலன் இன்பங்களில் நம்மை அதிகமாக ஈடுபடுத்திக்கொண்டு, ஜீவ காந்தத்தை சிதைவடைய செய்து கொண்டிருக்கிறோம். இந்த நிலை மாற்றம் பெற வேண்டும்.

🎱 *இன்றைய தற்சோதனை*

🎱 ஒரே மாதிரியாக மனிதனுக்கு வாழ்க்கை அமைப்பு என்பது கிடையவே கிடையாது. மாற்றத்தை நோக்கி மனித மனமும் அறிவும் உந்தித் தள்ளிக் கொண்டே இருக்கும். அந்த மாற்றங்களை நாம் ஞானத்தின் வழியாக அமைத்துக்கொண்டு, நம்மை மேலான நிலைக்கு உயர்த்திக் கொள்ள முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். இந்த முயற்சிக்கு துணையாகவும், பாதுகாப்பாகவும், உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இந்த நான்கையும் பயன்படுத்தி தான் ஆக வேண்டும். ஒன்றை மட்டும் பயன்படுத்தி முயற்சி செய்தால், பலன் அந்த ஒன்றின் அளவுக்குத் தக்கவாறு தான் அமையும். இதனை தற்சோதனைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

🎱 *இன்றைய பண்புப்பயிற்சி*

🎱 "பெருமைக்கும் ஏனைய சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்" இந்த குறளில் உள்ள உண்மைகளை நாம் வாழ்க்கையில் வெளிப்படையாக காண முடியும். இந்த உண்மையை உளமாற ஏற்று அதன் விளைவுகளை உணர்வதற்கு, அவைகள் சார்ந்த வழி பாதையில் நம்மை கொஞ்சம் நகர்த்தி பயணித்து பழகவேண்டும். இந்த பயணத்தில் நமக்கு பல்வேறு அனுபவங்கள் கிட்டும். அவை அனைத்தையும் நாம் ஞானத்திற்கு பயன்படுத்த வேண்டும். இந்த முறைதான் ஞான வழிபாடும், இறை ஞானமுமாகும். வாழ்க வளமுடன்..‌.

🎱 *இன்றைய மூலிகை*

🎱 *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.

🎱 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.

🎱 *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)

🎱 *ஆகாம்ய கர்மம் எனும்  புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🎱 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🎱 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🎱 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments