நித்தியக்கடன் மார்ச் 16 2022

🎱💠🎱💠🎱💠🎱💠🎱💠🎱

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மார்ச் 16*

🎱💠🎱💠🎱💠🎱💠🎱💠🎱

⛳ *இன்றைய நித்தியகடன்*

⛳ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

⛳ *இன்றைய சாதகம்*

⛳ புதன்கிழமை 
காலை:- ஒன்பது மையம், 
மாலை:- நித்யானந்தம்.
 
⛳ *இன்றைய நற்சிந்தனை*

⛳ உயிர் துகள்கள் இந்த பிரபஞ்சத்தில் மிகவும் தனித்துவம் வாய்ந்தது. மற்ற நான்கு வகையான பூதங்களும் அளவு மீறினால் முறை மாறினால் அது ஒன்றை ஒன்று அழித்துவிடும். ஆனால் விண்துகள்கள் மற்ற நான்கு வகையான பூதங்களோடும் இணைந்து இயங்க கூடியது. இந்த விண்ணில் இருக்கக் கூடிய தன்மை தான், மற்ற நான்கு வகையான பூதங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. தகவமைவுக்கோட்பாடு துகள்களை அடிப்படையாகக் கொண்டதே ஆகும்.

⛳ *இன்றைய தற்சோதனை*

⛳ உயிரின் சுழல் இயக்க வேகமும், அதன் ஓடும் விசையும் இயக்கமும், ஒரு மனிதனுக்குள் ஒரு உயிருக்குள் பலவிதமான மாற்றங்களை உருவாக்குகிறது. உயிரியக்க வேறுபாடே ஞானத்தை உருவாக்கும். பிரபஞ்ச உண்மைகளை உணர்வதற்கு உயிரியக்க வேகம், விரைவு, தேவை இதன் அடிப்படையிலேயே மூளை செல்களும், உடல் ஆரோக்கியமும், மன நலமும், வளமும் அமைகிறது. உயிருக்கான பயிற்சிகளை மனம் ஒன்றி செய்து தற்சோதனை பார்த்துக்கொள்ளுங்கள்.

⛳ *இன்றைய பண்புப்பயிற்சி*

⛳ அவரவர்களுடைய கருமைய தன்மைக்கு ஏற்ப, தூய்மைக்கு ஏற்ப, பிரபஞ்சத்தில் விரிந்து பரந்து இயங்கிக்கொண்டிருக்கும் உயிர் துகள்கள், கருமையம் வரை வந்து இயங்கும். இந்த நீதி எல்லோருக்கும் பொதுவானதாகும். இரண்டொழுக்க பண்பாட்டையும் கடைபிடித்து தன் வாழ்க்கையில், சரியான முறையில் பயிற்சிகளை செய்யும் எல்லோருக்கும், ஜீவாத்மா பரமாத்மாவோடு இணையும். வாழ்க வளமுடன்...

⛳ *இன்றைய மூலிகை*

⛳ *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.  

⛳ இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

⛳ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

⛳ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

⛳ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

⛳ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments