நித்தியக்கடன் மார்ச் 11 2022

🔰💢🔰💢🔰💢🔰💢🔰💢🔰

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மார்ச் 11*

🔰💢🔰💢🔰💢🔰💢🔰💢🔰

🌀 *இன்றைய நித்தியகடன்*

🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🌀 *இன்றைய சாதகம்*

🌀 வெள்ளிகிழமை 
காலை, மாலை இரண்டு 
வேளையும் சாந்தி தவம்.
 
🌀 *இன்றைய நற்சிந்தனை*

🌀 இந்த சமுதாயத்திலும், நம் அகத்திலும், புறத்திலும் நிறைய போலிகள் இருக்கின்றன. இந்த போலிகளை எல்லாம் நாம் இனம் கண்டு கொண்டு, அவற்றிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரை போலிகள் என்றால் ஒருவரது பலகீனத்தை மற்றவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அனைத்துமே போலிகள் தான். தவறான செய்திகளை பரப்ப கூடிய ஊடகங்கள், புத்தகங்கள், தகவல் பரிமாற்ற அமைப்புகள் இதையும் தாண்டி உண்மைத் தன்மையோடு நாம் இல்லாத போதும், அந்த தருணத்தில் அச்சமயத்தில் நாமும் போலியாகவே மாறிவிடுகிறோம்.

🌀 *இன்றைய தற்சோதனை*

🌀 புறத்திலே இருக்கும் போலிகளை நாம் எதுவும் செய்ய இயலாது. ஆனால் அவைகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். நமக்குள்ளே இருக்கக்கூடிய போலிகளை முறையான பயிற்சியின் மூலம் மட்டும்தான் மாற்றி அமைக்க முடியும். போலிகளை அடையாளம் காண்பதென்பது அவ்வளவு எளிது அல்ல. தற்சோதனை உங்களை கொஞ்சம் கொஞ்சமாக உண்மை தன்மையை நோக்கி உயரச் செய்யும். 

🌀 *இன்றைய பண்புப் பயிற்சி*

🌀 சிந்தனை, சிக்கனம், சீர்திருத்தம் இந்த பண்புகளை உங்களுக்குள் எவ்வளவு ஆழத்துக்கு கொண்டு சென்று, இந்த உண்மைகளோடு வாழ்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களிடம் இருக்கக்கூடிய போலிகள் கொஞ்சம் கொஞ்சமாக களையப்படும். ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் இருக்கும் போலித்தன்மை மாறும் போது, சமுதாயம் முழுவதுமே உண்மைநிலை தன்மையோடு உயர்வு காணும். ஆகவே சிந்தனை, சிக்கனம், சீர்திருத்தம், இப்பண்புகளில் உள்ளார்ந்து உயர்வோம். வாழ்க வளமுடன்...

🌀 *இன்றைய மூலிகை*

🌀 *நீராவி பிடித்தல்* குடிநீர் 1,1/2 லிட்டர் நன்றாக கொதிக்கவைத்து ஒரு போர்வையை போர்த்தி வாய் வழியாக இழுத்து மூக்கு வழியாகவும். மூக்கு வழியாக இழுத்து வாய் வழியாகவும் மாற்றி மாற்றி நீராவியை இழுத்து விடவும். காலை, மாலை இரண்டு வேளையும் பயன்படுத்தலாம். குறிப்பு:- மினரல் வாட்டர் தவிர்க்கவும்.

🌀 நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி என அனைத்தும் குணமாகும், 

🌀 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌀 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌀 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌀 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments