💠🔘💠🔘💠🔘💠🔘💠🔘💠
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*பிப்ரவரி 25*
💠🔘💠🔘💠🔘💠🔘💠🔘💠
👣 *இன்றைய நித்தியகடன்*
👣 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
👣 *இன்றைய சாதகம்*
👣 வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
👣 *இன்றைய நற்சிந்தனை*
👣 நம்முடைய பாதங்களே எடுத்து வைத்து நடக்கும்போது மிகுந்த கவனத்தோடு நடக்க வேண்டும் நம்முடைய பாதச்சுவடுகளை நம்முடைய அடுத்த சந்ததிகள் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள் நாம் இன்று எவ்வாறு வாழ்கிறோமோ அதைப் பின்பற்றியே நாளை அவர்களும் வாழப் போகிறார்கள் இன்று என்னுடைய எண்ணம் சொல் செயல் இவை எல்லாம் எப்படி இருக்கிறதோ அது போலவே அவர்களுடைய நாளையே எண்ணம் சொல் செய்யவும் அமையப்போகிறது என்ற உண்மையை உணர்ந்து நம்முடைய வாழ்க்கை பாதையில் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் எடுத்து வைப்போம்
👣 *இன்றைய தற்சோதனை*
👣 நாம் நல்ல முறையில் வாழ்ந்து நம் கருத்தொடர் வழியாக நமக்கும் அவர்களுக்கும் சேர்த்து வைக்கும் உண்மையான சொத்து என்பது இதுதான் நல்வினை பதிவுகள் நோயற்ற பதிவுகள் இறை உணரக்கூடிய பதிவுகள் இந்த நல்வினை பதிவுகள்தான் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கிறது நம் உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் முடிவு செய்கிறது இறைவனை உணர்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தருகிறது என்ற இந்த உண்மைகளையெல்லாம் தற்சோதனை செய்து அவரவர்களுடைய அனுபவமாக்கிக் கொள்ள வேண்டும்
👣 *இன்றைய பண்புப்பயிற்சி*
👣 தவம் தற்சோதனை உடற்பயிற்சி காயகல்பம் இவைகளில் ஈடுபட்டிருக்கும் நாம் எப்போதும் எங்கேயும் எதற்காகவும் முறை மாறிய அளவு மீரியோ செயல்படக்கூடாது சந்தர்ப்ப சூழ்நிலைகள் தடம்மாறினாலும் நாம் தடுமாறாமல் குருவின் கரங்களை பற்றிக்கொண்டு வைராக்கியத்தோடு நின்று நிலைத்து வாழ்ந்து காட்ட வேண்டும் இந்த மேன்மையான சொத்தை நம்முடைய சந்ததிகளுக்கு அற்பணித்து மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் வாழ்வோமாக வாழ்க வளமுடன்...
👣 *இன்றைய மூலிகை*
👣 *நீராவி பிடித்தல்* குடிநீர் 1,1/2 லிட்டர் நன்றாக கொதிக்கவைத்து ஒரு போர்வையை போர்த்தி வாய் வழியாக இழுத்து மூக்கு வழியாகவும். மூக்கு வழியாக இழுத்து வாய் வழியாகவும் மாற்றி மாற்றி நீராவியை இழுத்து விடவும். காலை, மாலை இரண்டு வேளையும் பயன்படுத்தலாம். குறிப்பு:- மினரல் வாட்டர் தவிர்க்கவும்.
👣 நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி என அனைத்தும் குணமாகும்,
👣 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
👣 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
👣 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
👣 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment