🚥🔶🚥🔶🚥🔶🚥🔶🚥🔶🚥
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*பிப்ரவரி 24*
🚥🔶🚥🔶🚥🔶🚥🔶🚥🔶🚥
🏮 *இன்றைய நித்தியகடன்*
🏮 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🏮 *இன்றைய சாதகம்*
🏮 வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🏮 *இன்றைய நற்சிந்தனை*
🏮 மனித பிறவியின் நோக்கம் என்ன என்று தெளிவாக புரிந்துகொண்டு வாழ்வினுடைய, நோக்கத்தை அதற்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ள வேண்டும். பிறவியின் நோக்கம் ஆறாவது அறிவில் முழுமை பெறுவது. இதற்கு இடையூறாக இருக்கக் கூடிய விளங்கின தன்மையை மாற்றி அமைத்துக் கொள்ளுதலே பிறவியின் நோக்கம். இந்த பிறவியின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில், வாழ்வின் நோக்கத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ, எண்ணம், சொல், செயல், இவை வழியாக துன்ப விளைவுகள் ஏற்படாமல் வாழ்வதே வாழ்வின் நோக்கம்.
🏮 *இன்றைய தற்சோதனை*
🏮 ஈடு இணையில்லாதது இறை ஆற்றல். அந்த ஆற்றலின் ஒரு பகுதியாகவே மனித பிறவி அமைந்துள்ளது. மயக்கநிலை பழக்கங்களிலிருந்தும், அவை சார்ந்த செயல்களில் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்த பாதுகாப்பு அரணாக இருப்பது அருட்பேராற்றல். தினந்தோறும் உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகள் வழியாக இந்த பாதுகாப்பு அரணை ஏற்படுத்திக் கொள்ள முடியும். நன்றாக தற்சோதனை செய்து பாதுகாப்பு அரணை உருவாக்குவோம்.
🏮 *இன்றைய பண்புப் பயிற்சி*
🏮 எச்செயல் செய்தாலும் விளைவு கட்டாயம் உண்டு. நம்முடைய அறிவை உயர்த்திக்கொண்டு, ஜீவகாந்தத்தை பெருக்க நிலையில் வைத்துக்கொண்டு, நம்முடைய செயல்களை அமைத்துக் கொள்ள வேண்டும். விலங்கின பதிவுகள் நமக்குள்ளாக செயல் புரியக் கூடிய பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் இவைகளிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வோம். இப்பண்பை உருவாக்கிக் கொண்டு வாழ்வில் உயர்வோம். வாழ்க வளமுடன்...
🏮 *இன்றைய மூலிகை*
🏮 *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
🏮 அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.
🏮 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🏮 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🏮 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🏮 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment