☘️🎴☘️🎴☘️🎴☘️🎴☘️🎴☘️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*பிப்ரவரி 22*
☘️🎴☘️🎴☘️🎴☘️🎴☘️🎴☘️
🔶 *இன்றைய நித்தியகடன்*
🔶 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔶 *இன்றைய சாதகம்*
🔶 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
🔶 *இன்றைய நற்சிந்தனை*
🔶 இறைவனே அனைத்துமாக தன்மாற்றம் பெற்றுள்ளார் என்பதை ஒவ்வொருவரும் அனுபவமாக்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் நீங்கள் பெறாத ஒரு அனுபவத்தை, உங்களுக்கு புரியாத ஒரு விஷயத்தை, மற்றவர்களிடத்தில் இருப்பதை உங்களால் உணரவும் முடியாது, அவர்கள் அதில் வளர்ச்சி அடைவதை உங்களால் பொருத்துக் கொள்ளவும் முடியாது. ஆதலினால் தயவு செய்து இறை உணர்வில் அனுபவம் பெறுவீர்களாக.
🔶 *இன்றைய தற்சோதனை*
🔶 உங்களுடைய அனுபவமும், உங்களுடைய புரிதலுமே உங்களுடைய வாழ்க்கையாகும். மற்றவர்களை மதிப்போடு நடத்துவதும் இதற்கு உட்பட்டுதான் நடைபெறும். தன்னைத்தான் மதிக்காத ஒருவரால், தன்மதிப்பை உணராத ஒருவரால் மற்றவரை மதிக்க முடியாது. தன்னுடைய மதிப்பை உணர்ந்து கொண்டு தன்னிறைவு பெறவேண்டும். தன்னை உணர்வதற்கு தற்சோதனை ஒன்றுதான் ஒரே வழிமுறையாகும். உங்களுடைய எண்ணம், சொல், செயல் மூன்றையும் சார்புத் தன்மை இல்லாமல் தற்சோதனை செய்து உண்மையில் வாழுங்கள்.
🔶 *இன்றைய பண்புப் பயிற்சி*
🔶 எல்லா நிகழ்ச்சிகளையும் இறைநிலையே நடத்துகிறது. எல்லா நிகழ்ச்சியாகவும் இறைநிலையே இருக்கிறது. இதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இயற்கையில் இல்லை. அனைத்துமே இறைநிலை தான் என்றபோதும் பாவமும், புண்ணியமும் அவரவர் கர்மவினையும், கருமையமுமே தீர்மானிக்கிறது. இதை உணர்வதற்கு உரிய பண்பில் உயர்வு பெறவேண்டும். உள்ளது உள்ளவாறு உணர்ந்து செயலாற்றும் இப்பண்பில் , சிறப்புற நாளுக்கு நாள் உயர்வு பெறுவோம். வாழ்க வளமுடன்...
🔶 *இன்றைய மூலிகை*
🔶 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🔶 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
🔶 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🔶 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🔶 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🔶 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment