நித்தியக்கடன் பிப்ரவரி 21 2022

🎱⚡🎱⚡🎱⚡🎱⚡🎱⚡🎱

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*பிப்ரவரி 21*

🎱⚡🎱⚡🎱⚡🎱⚡🎱⚡🎱

🚥 *இன்றைய நித்தியகடன்*

🚥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🚥 *இன்றைய சாதகம்*

🚥 திங்கட்கிழமை 
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.
 
🚥 *இன்றைய நற்சிந்தனை*

🚥 அக இயக்கத்திற்கும் புற இயக்கத்திற்கும் இடையே ஏற்படக்கூடிய வேறுபாடுகள்தான், மனதில் குழப்பத்தையும், வாழ்க்கையில் சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. அக இயக்கத்திற்கு ஏற்ப புற இயக்கத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த முயற்சியை மேற்கொள்ள நமக்கு உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் "வேதாத்திரியம்" எப்போதும் இருக்கும்.

🚥 *இன்றைய தற்சோதனை*

🚥 வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலைகளையும் நன்றாக சிந்தித்து தற்சோதனை செய்யுங்கள். இது நம் வாழ்க்கையில் நடைபெறுவதற்கான காரணம் என்ன? என்பதை தெளிவாக உணர்ந்து புரிந்து கொள்ளுங்கள். இந்த புரிதல் இல்லாத போது நாம் மேலும் மேலும் தவறான பழக்க வழக்கங்களை உருவாக்கிக் கொள்கிறோம். இதுவே மிகப்பெரிய சிக்கலாக அமைந்துவிடுகிறது. வாழ்க்கையை வாழ முடியாத அளவிற்கு துன்பமும், சிக்கலும் உருவாகிறது.

🚥 *இன்றைய பண்புப் பயிற்சி*

🚥 நான் நினைப்பதெல்லாம் சரி, என்று எப்போதும் எண்ணி விடாதீர்கள். இது சரியாக இருப்பதற்கு நூற்றுக்கு நூறு சதவீதம் வாய்ப்புகள் இல்லை. நம் எண்ணம் தோன்றுவதற்கு கருவமைப்பு, உணவு வகை, பிறர் மனத் தூண்டுதல், சந்தர்ப்ப சூழ்நிலைகள், அறிவமைப்பு, விடாமுயற்சி இவ்வாறு ஒரு எண்ணம் எழுவதற்கு இவ்வளவு காரணங்கள் இருக்கிறது. எதையும் நன்றாக சிந்தித்து அதன் உள் உண்மைகளை புரிந்துகொள்ளும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...

🚥 *இன்றைய மூலிகை*

🚥 *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.

🚥 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். 

🚥 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

🚥 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🚥 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🚥 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🚥 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments