🏈🎲🏈🎲🏈🎲🏈🎲🏈🎲🏈
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*பிப்ரவரி 17*
🏈🎲🏈🎲🏈🎲🏈🎲🏈🎲🏈
⛳ *இன்றைய நித்தியகடன்*
⛳ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
⛳ *இன்றைய சாதகம்*
⛳ வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
⛳ *இன்றைய நற்சிந்தனை*
⛳ நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒரு கோட்பாடு உண்டு. "பழையன கழிதலும் புதியன புகுதலும்" இந்த கோட்பாட்டின் அடிப்படையிலேயே, நமது உடலிலுள்ள ஏழுதாதுக்களும், உடல் உள் உறுப்புகளும், இயங்குகின்றன. பழையன கழியாமல் உடலிலேயே தங்கி இருக்கும்போது அங்கே ஏற்படுவதுதான் வலி, நோய், அனு அடுக்கு சீர்குலைவு. இவைகளை சரியாக பராமரிக்க நமக்கு அன்போடு எளியமுறை உடற்பயிற்சி "வேதாத்திரி மகரிஷி" அவர்கள் அருளியுள்ளார்கள்.
⛳ *இன்றைய தற்சோதனை*
⛳ பருவுடலில் உள்ள ஒவ்வொரு செல்களை பற்றியும் நன்றாக புரிந்து வைத்துக் கொண்டு, அவைகளை முறையாக வெளியேற்றியும் முறையாக அவைகளை உள்ளே சேர்த்துக் கொண்டும், வாழும் முறைக்கு பெயரே மனித வாழ்வாகும். இதுவே இறை நிலையை உணர்ந்த தெளிவான வாழ்வாகும். இதற்கு தற்சோதனை செய்து உங்களை நீங்களே ஆங்காங்கே சீர்படுத்திக் கொண்டு தற்காத்துக் கொள்ள வேண்டும்.
⛳ *இன்றைய பண்புப் பயிற்சி*
⛳ நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளும் பண்பு. இந்த பண்பில் உயர்வு பெறும் போதுதான், இப் பண்பில் நம்மை ஆட்படுத்திக் கொள்ளும் போதுதான் ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மிக உயர்ந்த வாழ்க்கை நிலைக்கு நாம் உயருகின்றோம். சுய கட்டுப்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை மனிதர்களாக பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரும் இப்பண்பை பின்பற்றியே ஆகவேண்டும் தன்நிலையை உணர்வதற்காக. வாழ்க வளமுடன்...
⛳ *இன்றைய மூலிகை*
⛳ *இஞ்சி+தேன்* தேவையான பொருட்கள், இஞ்சி 4 கிராம்
தண்ணீர் 90ml
தேன் ஒரு டீஸ்பூன்
⛳ செய்முறை:- இஞ்சியை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து அதில் உள்ள சுண்ணாம்பு படிந்த பின் தெளிந்த சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும்.
⛳ நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, அஜிரணம் என அனைத்தும் குணமாகும், *குறிப்பு:- இஞ்சி சாறும், மூன்று மாத குழந்தைக்கு மூன்று சொட்டு போதுமானது, ஒரு வயது குழந்தைகளுக்கு 2.5ml போதுமானது*.
⛳ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
⛳ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
⛳ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
⛳ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment